பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

very-high-speed-integrated

471

v.fast class


கின்ற ஒளிக்காட்சிச் சமிக்கையின் ஒரு பகுதி.

very-high-speed integrated circuit: மீவுயர்வேக ஒருங்கிணைப்பு மின்சுற்று: மிக அதிக வேகத்தில் செயல்பாடுகளை,குறிப்பாக தருக்கநிலைச் செயல்பாடுகளை நிறைவேற்றக் கூடிய ஒர் ஒருங்கிணைப்பு மின்சுற்று.

Very Large Database:மிகப்பெரும் தரவுத்தளம்: நூற்றுக்கணக்கான கிகா பைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தகவல்களைக் கொண்ட தரவுத்தள அமைப்பு. பொதுவாக மிகப்பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும்.கோடிக்கணக்கான ஏடுகள் உள்ள ஆயிரக்கணக்கான அட்டவணைகளைக் கொண்டிருக்கும்.வேறுவேறு பணித்தளங்களிலும், வெவ்வேறு இயக்க முறைமைகளிலும் செயல்படுவதாக இருக்கும்.பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுடன் இயைந்து செயல்படுவதாக இருக்கும்.

Very Large Memory:மிகப்பரந்த நினைவகம்: மிகப்பெரும் தரவுத் தளத்தோடு தொடர்புடைய மிகப் பெரும் தகவல் தொகுதிகளைக் கையாள்வதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு நினைவக அமைப்பு.முதன்மை நினைவகத்தை அணுகுவதற்கு 64-துண்மி(பிட்) ரிஸ்க்(RISC) தொழில்நுட்பத்தை இந்தவகை நினைவகங்கள் பயன்படுத்துகின்றன.ஒரு கோப்பின் அளவு 2 மெகாபைட் வரை இருக்கலாம்.14 ஜிபி நினைவகத்தை இடைமாற்று நினைவகமாக பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

very large scale integration (VLSI): பேரளவு ஒருங்கிணைந்த மின்சுற்றுகள்.

Very Long Data Book (VLDB):மிக நீண்ட தரவுப் புத்தகம்.

VESA1:வேசா1: விஎல் பாட்டை விரிவாக்கச் செருகுவாய்கள்.

VESA2:வேசா2: ஒளிக்காட்சி மின்னணுவியல் தரக்கட்டுப்பாட்டு கூட்டமைப்பு எனப்பொருள்படும் Video Electronics Standards Association என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒளிக்காட்சி மற்றும் பல்லூடக சாதனங்களின் தரங்களை மேம்படுதுவதை நோக்கமாகக் கொண்ட வன்பொருள் உற்பத்தியாளர்களையும் விற்பனையாளர்களையும் கொண்ட ஓர் அமைப்பு. காட்சித் தரவுத் தடம் (Display Data Channel-DDC), காட்சி மின் சார மேலாண்மை சமிக்கையாக்கம் (Display Power Management-Signalling-DPMS), வேசா உள்ளகப் பாட்டை (VESA Local Bus-VL Bus) போன்ற தர வரையறைகள் இவ்வமைப்பு உருவாக்கியவற்றுள் அடங்கும்.

V.everything வி.எல்லாம்;வி.அனைத்தும்: சிசிஐடீடீ (இப்போது ஐடியு.டீ) வி.34 வரையறைகள் மற்றும் வி.வேகம் (V.fast) வகையைப் போன்ற பல்வேறு தனி உரிமை நெறிமுறைகள் ஆகிய இரண்டோடும் ஒத்தியைந்து செயல்படும் இணக்கிகளைக் (மோடம்) குறிக்க, சில இணக்கி உற்பத்தியாளர்கள் பயன்படுத்துகின்ற சந்தைச் சொல்.ஒரு வி.அனைத்தும் இணக்கி அதே வேகத்தில் செயல்படும் வேறெந்த இணக்கியுடனும் ஒத்தியைந்து செயல்படும்.

V.Fast Class:வி.வேக வகுப்பு: வி.வேக இனக்குழு:வழக்கிலிருந்த தர வரையறையான வி.34 நெறி