பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

video display page

474

videophone


video display page:ஒளித்தோற்ற காட்சிப்பக்கம்: ஒரு முழுத் திரைப்படிமத்தைக் கொண்டுள்ள,கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி.இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை புதுப்பித்தல் மிக வேகமாக நிறைவு பெறமுடியும்.ஏனெனில் ஒரு பக்கம் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது பார்க்கப்படாத பக்கத்தை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ளமுடியும்.

video display unit (VDU):ஒளித்தோற்றக் காட்சியகம்; '

video driver:ஒளிக்காட்சி இயக்கி: ஒளிக்காட்சித் தகவி வன்பொருளுக்கும் இயக்கமுறைமை உட்பட பிற நிரல்களுக்கும் இடையே ஓர் இடைமுகத்தை வழங்கும் மென்பொருள்.திரையில் தெரியும் படிமங்களின் தெளிவு மற்றும் நிற ஆழத்தைப் பயனாளர் இந்த இயக்கி நிரல் மூலமாக விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும்.

video editor:ஒளிக்காட்சித் தொகுப்பி: ஓர் ஒளிக்காட்சிக் கோப்பின் உள்ளடக்கத்தை மாற்றியமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் அல்லது நிரல்.

video graphics board:ஒளிக்காட்சி வரைகலைப் பலகை: ஓர் ஒளிக்காட்சித் திரையில் வரைகலைப் படிமங்களைக் காண்பிக்க ஒளிக்காட்சிச் சமிக்கைகளை உருவாக்குகின்ற ஓர் ஒளிக்காட்சித் தகவி.

video graphics adapter card:ஒளிக்காட்சி வரைகலைத் தகவி அட்டை

videoline mail:ஒளிக்காட்சி அஞ்சல்; நிகழ்பட அஞ்சல்,ஒளிப்பட அஞ்சல்,video memory ஒளிக்காட்சி நினைவகம்:ஒளிக்காட்சித் தகவி அல்லது ஒளித்தோற்றத் துணை அமைப்பில் ஒரு காட்சிப்படிமம் உருவாக்கப்பட்டு இருத்தி வைக்கப் பட்டுள்ள நினைவகப்பகுதி.இப்பகுதியை அணுகுவதற்கு எழுது/படிப்பு செயலியைவிட ஒளிக் காட்சித் துணை அமைப்புக்குத் தான் முன்னுரிமை அதிகம்.எனவே,முதன்மை நினைவகத்தை அணுகு வதைவிட ஒளிக்காட்சி நினைவகத்தைப் புதுப்பித்தல் மெதுவாகவே நடைபெறும்.

video mode:ஒளிக்காட்சி பாங்கு: ஒரு கணினியின் ஒளிக்காட்சித் தகவியும் திரையகமும் இணைந்து படிமங்களைத் திரையில் காட்டும் முறை.பெருமளவு புழக்கத்தில் உள்ளவை உரைப் பாங்கும் வரைகலைப் பாங்கும்.உரைப்பாங்கினில் எழுத்து,எண்,குறிகள் போன்ற குறியீடுகள் எதுவும் படப்புள்ளிகளால் திரையில் வரையப்படுவதில்லை. ஆனால்,வரைகலைப் பாங்கினில் எழுத்தாக இருந்தாலும் படமாக இருந்தாலும் அனைத்துத் திரைப் படிமங்களுமே படப்புள்ளிகளின் தோரணிகளாக ஒரு நேரத்தில் ஒரு புள்ளி வீதம் திரையில் வரையப்படுகின்றன.

video noise:ஒளிக்காட்சி இரைச்சல்.

video picture:ஒளிக்காட்சிப் படம்.

videophone:ஒளிக்காட்சிப் பேசி: படப்பிடிப்பி (camera),திரை(screen),நுண்ஒலிவாங்கி(Microphone),ஒலிபெருக்கி(Speaker) ஆகியவை கொண்ட ஒரு சாதனம்.