பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

virtual device

475

virtual LAN


யிலும் பரவியிருக்கும்.அப்போது விண்டோஸின் முகப்புத்திரை (desktop) பின்னால் மறைந்திருக்கும்.இதுபோன்ற தருணங்களில் முகப்புத் திரையிலுள்ள குறுவழி (shortcut)/ பயன்கூறுகளை (utilities) அணுகுவதற்கு உதவிசெய்யும் நிரல்.முகப்புத்திரை மேம்படு நிரல்.

virtual device:மெய்நிகர் சாதனம்: பருநிலையில் நிலவாத ஆனால் நிரல்கள் மூலம் குறிப்பிடப்படும் ஒரு சாதனம்.(எ-டு) மெய்நிகர் நினைவகம் என்பது,முதன்மை நினைவகத்தில் இடமில்லாதபோது நிலைவட்டில் ஏற்படுத்தப்படும் தற்காலிக நினைவகப்பகுதி.இதே போல, நினைவகத்தில்,ஒரு மெய்நிகர் வட்டுப்பகுதியை உருவாக்க முடியும்.

virtual device driver:மெய்நிகர் சாதன இயக்கி: விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள்.வளத்தினை மேலாண்மை செய்கின்ற ஒரு மென்பொருள்.ஒரு வளம்,முதல் அணுகலுக்கும் அடுத்த அணுகலுக்கும் இடையே சில தகவல்களைத் தக்கவைத்துக்கொள்கிறது எனில் (எ-டு:ஒரு வட்டுக்கட்டுப்படுத்தியில் நிலைமைத் தகவல் மற்றும் இடையகங்கள்), அதற்கான மெய்நிகர் சாதன இயக்கி ஒன்று இருக்க வேண்டும்.பொதுவாக,மெய்நிகர் சாதன இயக்கிகள் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும்.முதல் எழுத்து V ஆகவும் கடைசி எழுத்து D ஆகவும் இருக்கும்.நடு எழுத்து சாதன வகையைக் குறிக்கும்.எடுத்துக்காட்டாக D என்பது திரைக்காட்சி (Display),P என்பது அச்சுப்பொறி (Printer),T என்பது நேரங்காட்டி (Timer) என இருக்கும்.குறிப்பிட்ட சாதனவகை இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதது எனில் x என இருக்கும். அதாவது,மெய்நிகர் சாதன இயக்கி Vxd என இருக்கும்.

virtual excution system:மெய்நிகர் செயற்பாட்டு முறைமை.

virtual library:மெய்நிகர் நூலகம்.

virtual image:மெய்நிகர் படிமம்: கணினி நினைவகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு படிமம். ஆனால்,முழுப் படிமத்தையும்,அப்படியே முழுமையாக ஒரே திரையில் காண்பிக்க முடியாத அளவுக்குப் பெரியது.இதுவரை பார்க்கவியலாத பகுதிகளை உருட்டி,விரித்துப் பார்வைக்குக் கொண்டுவரமுடியும்.

virtual-image file:மெய்நிகர் படிமக்கோப்பு: ஒரு குறுவட்டில் (CD-ROM) பதியவிருக்கின்ற தகவல்களைக் குறிக்கும் ஒரு கோப்பு.குறுவட்டில் பதியவிருக்கின்ற அனைத்துக் கோப்புகளும் ஓரிடத்தில் திரட்டப்படுவதற்குப் பதிலாக,அக்கோப்புகளுக்கான சுட்டுகள் (pointers) மெய்நிகர்-படிமக் கோப்பில் இடம் பெற்றிருக்கும்.பதியப்பட வேண்டிய கோப்புகள் நிலைவட்டில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கலாம்.

virtual home for the holidays:வீடு முறைக் காலத்து மெய்நிகர் இல்லம்.

virtual LAN:மெய்நிகர் லேன்: வழங்கன் கணினிகளின் பல்வேறு குழுக்கள் ஒருகிணைக்கப்பட்ட ஒரு குறும்பரப்புப் பிணையம் (LAN).இவை வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டவை.என்றாலும் அவை ஒரே லேனில் இணைக்கப்பட்டவை போலவே தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன.