பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voice-capable modem

481

VON


voice-capable modem:குரலறி திறனுள்ள இணக்கி: தன்னுடைய தகவல் கையாளும் செயல்பாடுகளோடு குரல்வழிச் செய்திகளையும் ஏற்கும் திறனுள்ள ஒரு இணக்கி.

voice-grade channel:குரல் தரத் தடம்: ஒரு தொலைபேசி இணைப்பைப் போன்ற தகவல் தொடர்புத் தடம்.300-3000 ஹெர்ட்ஸ் கேட் பொலி அலைக்கற்றை கொண்ட,குரல் தகவலை அனுப்புவதற்கு ஏற்றது.வினாடிக்கு 33 கிலோபிட் வரை தொலைநகல்,தொடர்முறை,இலக்கமுறைத் தகவல்களை அனுப்பிட ஒரு குரல்-தரத் தடத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

voice.net:குரல்பிணையம்: இணையத்தில் நடைபெறும் தொலைபேசி வழியான தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கும் சொல்தொடர். பெரும்பாலும்,மின்னஞ்சல் ஒப்பத்தின் முன்பாக இடம் பெறுவது.

voice recognition software:குரலறி மென்பொருள்.

voice recorder:குரல் பதிப்பி.

voice synthesizer:குரல் இணைப்பாக்கி.

void:அற்றநிலை.

volt:வோல்ட்: இரு முனைகளுக்கிடையேயான மின்னூட்ட வேறுபாடு அல்லது மின்னியக்கச் சக்தி.1 கூலம்ப் மின்னூட்டம்,1ஜூல் வேலையை முடிக்கும் முனைகளின் மின்னியக்க அளவு 1 வோல்ட் எனக் கணக்கிடப்படுகிறது.(அல்லது) ஓம் மின்தடுப்பி மீது,பாயும் 1ஆம்பியர் மின்னோட்டத்தை வழங்கும் மின்னியக்க வேறுபாடு.

volts alternating current:வோல்ட் மாறுநிலை மின்னோட்டம்: ஒரு மின்சார சமிக்கையின் உச்சம் முதல் உச்சம் வரையிலான மின்னழுத்த வீச்சுகள் அளவீடு,

volume:தொகுதி: பாகம்/ஒலியளவு: 1. கணினித் தகவல்களைச் சேமித்து வைக்கும் ஒரு வட்டு அல்லது நாடா.சில வேளைகளில் மிகப்பரந்த நிலைவட்டுகள் பல்வேறு பாகங்களாகப் பிரிக்கப்படும்.ஒவ்வொரு பாகமும் ஒரு தனி வட்டாகவே கருதப்படும். 2.கேட்பொலி சமிக்கையின் ஒலியளவு.

volume control:ஒலியளவுக் கட்டுப்பாடு.

volume serial number:தொகுதி வரிசை எண்: ஒரு வட்டு அல்லது நாடாவை அடையாளங் காணப்பயன்படும் வரிசை எண். தேவையெனில் வைத்துக்கொள்ளலாம்.எம்எஸ் டாஸ் முறைமையில் தொகுதி வரிசை எண் என்று குறிப்பிடப்படுகிறது.ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் தொகுதிக் குறிப்பு எண்(Volume Reference Number) எனப்படுகிறது.தொகுதி வரிசை எண் என்பது தொகுதிச் சிட்டை (volume label),தொகுதிப்பெயர் என்பதிலிருந்து வேறுபட்டது.

VON:வோன்:இணையத்தில் குரல் எனப் பொருள்படும். Voice on Net என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.இணையத்தின் வழியாக நிகழ்நேரக் குரல் மற்றும் ஒளிக்காட்சித் தகவல்களை அனுப்புவதற்கான வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பத்தின் ஒரு பரந்த வகைப்பாடு. இச்சொல்தொடரை உருவாக்கியவர் ஜெஃப் புல்வர் (Jef Pulver).வான் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்கியவர்.வான்


31