பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

waranty

484

web browser


பயனாளர். இவர்களில் பெரும்பாலோர் தாம் பார்வையிட்ட தகவல்களை வகைப்படுத்தி வைப்பதுண்டு.

waranty:உத்திரவாதம்.

water mark: நீர்வரிக்குறி, நீர்க்குறி.

wat:வாட்: ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச்சுற்றின் சக்தி,அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

E - மின்னூட்டம்

I - மின்னோட்டம்

R - மின்தடை

P - மின்சக்தி (வாட்டில்)

எனில்,

P = IxE =I2xR =E2/R

.wav:வேவ்: அலைவடிவ கேட் பொலி வடிவாக்கத்தில் பதிவு செய்துள்ள ஒலிக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (file extension).

wavelet:சிற்றலை; அலைத் துணுக்கு: வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக் குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஆனால் சைன், கொசைன் சார்புகளில் வரம்பிலா நேரம்வரை அலைவரிசையும் (Frequency),அலைவீச்சும் (Amplitude) மாறாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.

WBEM:டபிள்யூபிஇஎம்: வலை அடிப்படையிலான நிறுவன மேலாண்மை என்று பொருள்படும். Web-Based Enterprise Management என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு வலை உலாவியை (web browser), பிணையத்தைக் கண்காணிக்கும் ஒரு சாதனம் அல்லது ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் நேரடியாகப் பிணைத்துவைக்கும் ஒரு நெறிமுறை (Protocol).

weak typing:பலவீன இனப் பாகுபாடு: கண்டிப்பில்லா இன உணர்வு : தரவுத் இனங்களைக் (Data type) கையாளுவதில் நிரலாக்க மொழிகளில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறியின் (variable) தரவுத் இனத்தை மாற்ற அனுமதித்தல்.(எ-டு): சி#, ஜாவா போன்ற மொழிகளோடு ஒப்பிடுகையில், சி-மொழி தகவல் இனங்களைக் கையாள்வதில் ஒரு கண்டிப்பில்லாத நடைமுறையைப் பின்பற்றுகிறது எனலாம்.

wear:அணி.

web:(தகவல்)வலை; இணையம் : மீவுரையால் (Hyper Text) ஆன, ஒன்றோடொன்று தொடுப்புடைய ஏராளமானஆவணங்களின் தொகுப்பு. பயனாளர்,முகப்புப் பக்கம் (Home Page) வழியாக இணையத்தில் நுழைகிறார்.

web based tamil education:இணையம் வழி தமிழ்க் கல்வி.

web browser:வலை உலாவி; இணைய உலாவி: வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டிஎம்எல் ஆவணங்களைப் பார்வை