பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

web page

486

web Tv


கட்டமைப்பையும் வடிவமைப்பையும் பராமரித்தல் ஆகிய பொறுப்புகளை தள நிர்வாகி வகிக்கிறார்.

web page:வலைப்பக்கம்; தளப் பக்கம்; இணையப் பக்கம்: வைய விரிவலையில் உள்ள ஆவணம். ஒரு வலைப்பக்கம் என்பது ஒரு ஹெச்டி எம்எல் கோப்பு. தொடர்புடைய வரைகலை, உரைநிரல் (scripts) ஆகியவற்றை குறிப்பிட்ட கணினியில் குறிப்பிட்ட கோப்பகத்தின்கீழ் கொண்டிருக்கும். இவையனைத்தும் சேர்ந்தே ஒரு யூஆர்எல் எனப்படுகிறது. பொதுவாக, வலைப்பக்கங்கள் பிற வலைப்பக்கங்களுக்கான தொடுப்புகளைக் கொண்டிருக்கும்.

web page design programme: வலைப்பக்க வடிவமைப்பு நிரல்கள்.

web page organizer:வலைப்பக்க ஒருங்கிணைப்பு.

web ring:வலை வளையம்.

web server form:வலை வழங்கள் படிவம்.

web site:வலைத்தளம்; வலையகம்; இணையதளம்; இணையகம் : வைய விரிவலையில், ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் தொடர்பான ஹெச்டிஎம்எல் ஆவணங்கள், தொடர்புடைய பிற கோப்புகள், உட்பொதி நிரல்கள்,ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் மூலம் தகவல் வழங்குகின்ற தரவுத் தளங்கள் இவை அனைத்தும் சேர்ந்த தொகுப்பு. ஹெச்டிஎம்எல் ஆவணங்கள் மீத்தொடுப்பு (Hyperlinks)களினால் பிணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வலைத்தளங்கள் உள்ளடக்கத்தைப் பொருளடக்கமாகத் தரும் முகப்புப் பக்கத்தைக் (Home Page) கொண்டிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தங்களின் ஒரே வலைத்தளத்திற்கென ஒன்றுக்கு மேற்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளை வைத்திருக்கின்றன. எனினும், ஒரே ஹெச்டிடீபீ வழங்கனில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறு வலைத்தளங்கள் இருக்க முடியும். தனிநபர்கள் தமக்கென வைத்திருக்கும் பலநூறு வலைத்தளங்கள் ஒரே வழங்கனில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட பயனாளர் கணினியில் இணைய இணைப்பு வசதியும், ஒரு வலை உலாவி மென்பொருளும் இருக்க வேண்டும்.

web site addresses: வலைதள முகவரிகள்.

web style: வலைப்பாணி

web terminal:வலை முனையம்: மையச் செயலகம் (CPU), ரேம் (RAM),அதிவேக இணக்கி (Modem),மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன்மிகுந்த ஒளிக்காட்சி வரைகலை-இவற்றைக் கொண்ட கணினி, நிலைவட்டு கிடையாது. இது, பெரும்பாலும் வைய விரிவலையின் கிளையனாக மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதனைப் பொதுப்பயன் கணினியாகப் பயன்படுத்த முடியாது.

web TV:வலை டீவி; வலைத் தொலைக்காட்சி: ஒரு சிறிய கருவிப் பெட்டியின் உதவியுடன்,வைய விரிவலையை அணுகி, வலைப் பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில்நுட்பம்.