பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

webzine

487

white board


webzine:வலைஇதழ்; இணைய இதழ், மின்னிதழ்: தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப் போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரிவலையில் வெளி யிடப்படுகின்ற இதழ்.

WELL:வெல்: முழுப்புவி மின்னணுத் தொடுப்பு என்று பொருள் Whole Earth Electronic Link என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கலந்துரையாடல் அமைப்பு. பல்வேறு நகரங்களிலிருந்து இணையம் வழியாக,தொலைபேசி இணைப்பு மூலம் அணுக முடியும். இது ஒரு மெய்நிகர் மனிதச் சமூகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கணினி வல்லுநர்கள் தவிர சாதாரண மக்களும் இதில் விரும்பிப் பங்கேற்கின்றனர். ஏராளமான பத்திரிகையாளர்களும் பிற செல்வாக்குப் பெற்ற அறிஞர்களும் பங்கு பெறுவதால், இதனுடைய குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களையும் தாண்டி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

welcome page:வரவேற்புப் பக்கம்.

welknown port:நன்கறிந்த துறை.

what-if analysis:இது கொடுத்தால் எது கிடைக்கும்;இது தரின் எது வரும்: விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம் பெறும்.எடுத்துக்காட்டாக, வங்கியில் கடன் பெறும் ஒருவர்,வெவ்வேறு வட்டி வீதங்களில் மாதத் தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். what will be the result, if the input is this? என்பதன் சுருக்கமே what-if analysis எனப்படுகிறது.

whatis:வாட்இஸ்; என்ன இது: 1.யூனிக்ஸ் கட்டளை. யூனிக்ஸ் கட்டளைகளில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள் பற்றிய விளக்கங்களைத் தரும். 2. இணையத்திலுள்ள ஒரு மென்பொருளைத் தேடிக் கண்டறிய,அதைப் பற்றிய விவரிப்பில் குறிப்பிட்ட சொற்கள் உள்ளனவா எனத் தேடுவதற்குப் பயன்படும் ஒர் ஆர்க்கி (Archie) கட்டளை.

WHIRLWIND:வேர்ல்விண்டு: 1940 களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) உருவாக்கப்பட்டு, 1950களில் பயன்படுத்தப்பட்ட, வெற்றிடக் குழாய்களினால் ஆன இலக்கமுறைக் கணினி. சிஆர்டீ திரைக்காட்சி,நிகழ்நேரச் செய லாக்கம் ஆகிய புதிய கண்டுபிடிப்புகள் வேர்ல்விண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டப் பணியில் உறுப்பினராய் இருந்த கென்னத் ஹெச் ஓல்சன் (Kenneth H. Olsen),1957ஆம் ஆண்டில் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷனை நிறுவினார்.

whiteboard:ஒயிட்போர்டு; வெண்பலகை, கரும்பலகை (நம் வழக்கு): ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும்