பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

audio response device

47

auto correct


யிலுள்ள ஒலியன்களின் கூட்டிணைவாகவோ இருக்கலாம்.

audio response device : கேட்பொலி மறுமொழிக் கருவி.

audio system : ஒலி முறைமை; கேட்பொலி முறை.

auditing : கணக்காய்வு : ஒர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவுசெய்யும் இயக்க முறைமையின் செயல்பாடு. பாதுகாப்புக் குறிப்பேடு (security log) என்றறியப்படும் ஒரு கோப்பில் அத்தகைய நிகழ்வுகள் பதிவுசெய்யப் பட்டிருக்கும். தகுந்த உரிமை பெற்ற பயனாளர்கள் மட்டுமே இக்கோப்பின் உள்ளடக்கத்தை அறிய முடியும்.

audit of computer system : கணினி முறைமைத் தணிக்கை.

AUI cable : ஏயுஐ வடம் : உடனிணைப்புச் சாதன இடைமுகக் கம்பி வடம் என்ற பொருள்தரும் Attachment Unit Interface Cable என்பதன் சுருக்கம். ஓர் ஈதர்நெட் பிணையத்துடன் ஒரு கணினியின் தகவியை (adapter)யை இணைக்கும் அனுப்பிப் பெறும் வடம்.

authenticate : சான்றுதிப்படுத்து.

author styles : படைப்பாக்கப்பாணி

authering: படைப்பாக்கம்.

authoring language : படைப்பாக்க மொழி: கணினி வாயிலாகக் கற்பிக்கப்படும் பாடங்களையும், தகவல் தளங்கள் மற்றும் நிரல் தொகுப்புகளையும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி அல்லது பயன்பாட்டு உருவாக்க முறைமை. நுண் கணினி பணித்தளம் பொறுத்தவரை, பலரும் அறிந்த எடுத்துக்காட்டு, பாடங்களை உருவாக்கப் பயன்படும் பைலட் (PILOT) மொழியாகும்.

authorization level : ஏற்கப்பட்ட ஆணைத் தொடர் மட்டம்.

authorised programme : ஏற்கப்பெற்ற நிரல்.

auto - answer : தானியங்கு விடை.

Auto Cad : ஆட்டோ காட் - ஒரு மென்பொருள் தொகுப்பு.

autofit : தானாகப் பொருந்தவை.

autoflow : முன்னோட்டம்.

auto font : தன்னியல்பு எழுத்துரு.

autologon : தானியங்கு புகுபதிகை.

auto code : தானியங்கு குறிமுறை.

auto poling : தானியங்கு பதிவு.

auto - load : தானியங்கு ஏற்றி.

auto correct : தானாகப் பிழைதிருத்தல்; தானியங்கு பிழைதிருத்தம் : விண்டோஸில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஒர் ஆவணத்தில் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்யப்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, தட்டச்சு செய்யப்படும் சில குறியீடுகள்/சொற்கள், முன்கூட்டியே வரையறுக்கப் பட்டபடி பதிலீடு செய்யப்பட்டுவிடும். எடுத்துக்காட்டாக, the என்ற சொல்லைத் தவறுதலாக teh என்று தட்டச்சு செய்தோமெனில் அது தானாகவே the என்று மாறிவிடும். விசைப் பலகையிலுள்ள மேற்கோள்