பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

WIN32

489

windows95


பயன்படுத்தப்படுகின்றன.(எ-டு):"SALES." என்பது SALES என்னும் முதன்மைப் பெயருள்ள, வகைப் பெயர் (extension) எதுவாக இருப்பினும் அத்தனை கோப்புகளையும் குறிக்கும். .DOC என்பது DOC என்னும் வகைப்பெயர் கொண்ட அனைத்து கோப்புகளையும் குறிக்கும். SALES1.XLS,SALES2XLS,SALES3.XLS ஆகிய கோப்புகளை SALE?.XLS என்று குறிப்பிடலாம்.

WIN32:வின்32: விண்டோஸ் 95/98 என்டி இயக்க முறைமைகளுக்கான பயன்பாடுகள், இன்டெல் செயலி 80386 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகளிலுள்ள 32-பிட் ஆணைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் (Application Programm Interface - API) குறிக்கிறது. விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி ஆகியவை 16-பிட் உள்ள 80x86 ஆணைகளையும் ஏற்கும் என்றபோதிலும்,வின்32 செயல்திறன் மிக்கதாகும்.

WIN32S:வின்32எஸ்: வின்32 பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் ஒர் உட்பிரிவு. விண்டோஸ் 3.எக்ஸில் செயல்படக்கூடியது. இலவசமாக வழங்கப்படும் வின்32எஸ் மென்பொருளைச் சேர்த்துக்கொண்டால், ஒரு பயன்பாடு இன்டெல் 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில், விண்டோஸ் 3.எக்ஸ் சூழலில் செயல்படும்போது, 32-பிட் ஆணைகளைப் பயன்படுத்திக் கொள்வதால் செயல் திறன் அதிகரிக்கும்.

window definition function:சாளர வரையறுப்புச் செயல்கூறு: ஒரு மெக்கின்டோஷ் பயன்பாட்டில் ஒரு சாளரத்தோடு தொடர்புடைய வளத்தைக் குறிக்கும். ஒரு சாளரத்தை திரையில் காட்டும்போதும், சாளர அளவுகளை மாற்றிய மைக்கும்போதும் மெக்கின்டோஷ் "விண்டோ மேனேஜர்" நிரல் இந்த செயல்கூறை நிறைவேற்றும்.

Windows 95:விண்டோஸ் 95:இன்டெல் 80386,அதற்கும் மேம்பட்ட செயலிகளில் செயல்படக் கூடிய ஓர் இயக்க முறைமை. வரைகலைப் பயனாளர் இடைமுகம் கொண்டது. மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 1995இல் வெளியிட்டது. விண்டோஸ் 3.11, பணிக்குழுவுக்கான விண்டோஸ் 3.11,எம்எஸ்டாஸ் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக வெளியிடப்பட்ட ஒரு முழுமையான இயக்க முறைமை.விண்டோஸ் 3.xடாஸ்மீது செயல்படும் ஒரு பணிச்சூழல் (Operating Environment). ஆனால் விண்டோஸ் 95,டாஸின் உதவியின்றிச் செயல்படும் ஒரு தனித்த இயக்க முறைமை. என்றாலும் எம்எஸ்டாஸ் மென்பொருள்களை விண்டோஸ்95இல் இயக்க முடியும். 255 எழுத்துகள் வரை நீண்ட கோப்புப் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். எந்தப் பிணையத்தின் கிளையனாகவும் செயல்படவல்லது. தம்மளவில் விண்டோஸ் 95 கணினிகளை ஒன்றாகப் பிணைத்து, சமனி-சமனி (peer to peer) பிணையம் அமைத்துக் கொள்ள முடியும். இணைத்து-இயக்கு(plug and play)முறையில் எந்தவொரு வன்பொருளையும் அது வாகவே அடையாளம் காணும். பல்லூடகம், இணைய இணைப்புக்கான வசதிகள் அனைத்தும் கொண்டது. 80386 செயலி, 4 எம்பி