பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

window menu

490

window metafile format


ரேம் உள்ள கணினிகளில் செயல்படும். என்றாலும் 80486 செயலி 8 எம்பி ரேம் இருப்பது நல்லது.

window menu:சாளரப் பட்டி.

windows application:விண்டோஸ் பயன்பாடு: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் சூழலில் செயல்படு மாறு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் பயன்பாடு.

windows-based accelerator:விண்டோஸ் அடிப்படையிலான வேக முடுக்கி: விண்டோஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளை வேகமாக இயக்குவதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீத்திறன் விஜிஏ (Super VGA) ஒளிக்காட்சித் தகவியின் ஒருவகை. தகவியின் படிப்பு நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தனிச்சிறப்பு நிரல்கூறுகளின் உதவியால், சாதாரண எஸ்.விஜிஏ ஒளிக்காட்சித் தகவிகளைவிடக் கூடுதல் வேகமும் திறனும் கொண்டது.இந்த நிரல்கள்,ஒளிக்காட்சி தொடர்பாக ஆற்ற வேண்டிய சில பொறுப்புகளிலிருந்து விண்டோஸ் இயக்கமுறைமையை விடுவிக்கின்றன. இதனால் செயல்பாட்டு வேகம் கூடுகிறது.

Windows CE:விண்டோஸ் சிஇ: மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் குறுகிய வடிவம். கையகக் கணினிகளுக்கென வடிவமைக்கப்பட்டது. எக்செல்,வேர்டு,இன்டர்நெட் எக்ஸ் புளோரர், ஷெட்பூல்+,மின்னஞ்சல் கிளையன் போன்ற விண்டோஸ் பயன்பாடுகள் பலவற்றின் குறுகிய வடிவங்களையும் விண்டோஸ் சிஇ-யில் இயக்கமுடியும்.

Windows Driver Library:விண்டோஸ் இயக்கி நூலகம்: மூல விண்டோஸ் தொகுப்பில் சேர்க்கப்படாத, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைக்கான வன்பொருள் சாதன இயக்கிகளின் தொகுதி.

Windows Explorer:விண்டோஸ் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 95/98இல்,கோப்புறை மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3.1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் (Panels) இருக் கும். இடப்புறப் பாளத்தில் கோப்புறைகளின் பட்டியலைப் பார்வையிடலாம். ஒரு கோப்புறையைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை வலப்புறப் பாளத்தில் பார்வையிடலாம்.

Windows For Workgroups:பணி குழுவுக்கான விண்டோஸ்: 1992ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விண்டோஸின் ஒரு பதிப்பு. ஈதர்நெட் லேனில் செயல்படுமாறு வடிவமைக்கப் பட்டது. இதற்கென தனியான பிணைய மென்பொருள் தேவையில்லை.

Windows keyboard:விண்டோஸ் விசைப்பலகை.

Windows Media Player:விண்டோஸ் மீடியா பிளேயர்- ஒரு மென்பொருள்.

Windows Metafile Format :விண்டோஸ் மீகோப்பு வடிவாக்கம்:நெறிய வரைகலை (vector graphics) கோப்புகளுக்கான விண்டோஸ் கோப்பு வடிவாக்கம். இரண்டு பயன் பாடுகளுக்கிடையே வரைகலைத் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், இருவேறு பணி அமர்வுகளுக்கிடையே தகவலைச் சேமிக்கவும் பயன்படுகிறது.