பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Windows NT

491

winsock


Windows NT:விண்டோஸ் என்டி. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை. என்டி எஃப்எஸ் (NTFS) என்னும் பாதுகாப்பான கோப்பு முறைமையைக் கொண்டது. பல்பயனாளர் அமைப்பில் பாதுகாப்புமிக்கது. விண்டோஸ் என்டி 4.0 பதிப்பு ஒர்க்ஸ்டேஷன், செர்வர், அட்வான்ஸ்டு செர்வர், டேட்டா சென்டர் செர்வர் என்னும் நான்கு வடிவங்களில் வெளியிடப் பட்டது.

Windows NT Advanced Server: விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர்: விண்டோஸ் என்டி-யின் மேம்பட்ட வடிவம். மையப்படுத் தப்படாத பகிர்ந்தமை கள (domain) அடிப்படை கொண்ட பிணைய மேலாண்மை மற்றும் பாதுகாப்புக் கொண்டது. மேம்பட்ட நிலைவட்டு பழுது தாக்குப்பிடித்தல் வசதிகளைக் கொண்டது. நிலைவட்டுகளில் ஏற்படும் எதிர்பாராப் பழுதுகளை எதிர்கொள்ள பிம்பமாக்கம் (Mirroring) போன்ற வசதிகள் உள்ளன. வலை வழங்கன்களுக்கு ஏற்ற இயக்க முறைமை.

Windows Update:விண்டோஸ்-இற்றைப்படுத்தல்.

Windows XP:விண்டோஸ் எக்ஸ்பீ: மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள மிக அண்மைய இயக்க முறைமைய விண்டோஸ் என்டி5.0 பதிப்பே இவ்வாறு பெயர் மாற்றம் பெற்றுள்ளது. எக்ஸ்பீ என்ற எழுத்துகள் eXPerence என்ற சொல்லாகக் குறிக்கின்றன. கண்ணுக்கதிமான பயனாளர் இடை முகத்தைக் கொண்டுள்ளது. குரல் கட்டளையை ஏற்கும் கையெழுத்தை அறியும். உரையைப் பேச்சாய் மாற்றும். இதுபோல் இன்னும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ள பாதுகாப்பான திறன்மிக்க இயக்க முறைமை.

winG:வின்ஜி:விண்டோஸ் விளையாட்டுகள் என்று பொருள்படும் Windows Games என்பதன் சுருக்கம்.விண்டோஸ் 95 சூழலில் கணினி விளையாட்டுகளுக்கான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). வின்ஜி-யின் கீழ், விளையாட்டு நிரல்கள் ஒளிக்காட்சிச் சட்ட இடையகத்தை(Video Frame Buffer) நேரடியாக அணுக முடியும். இதனால் வேகம் கூடும்.

WINS வின்ஸ்: விண்டோஸ் இணையப் பெயரிடு சேவை எனப்பொருள்படும் Windows Internet Naming Service group Glgmu flair தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் புரவன் பெயரை (Host Name) அதன் ஐ.பீ முகவரியோடு பொருத்தும் விண்டோஸ் என்டி செர்வர் வழிமுறை.

WINS - Confignration:வின்ஸ் உள்ளமைவு.

Winsock:வின்சாக்: விண்டோஸ் செருகுவாய் என்று பொருள்படும் Windows Sockek என்பதன் சுருக்கம். விண்டோஸில் டீசிபி/ஐபபீ இடை முகத்தை வழங்குகின்ற ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API).1991இல் நடைபெற்ற யூனிக்ஸ் மாநாட்டில் மென்பொருள் விற்பனையாளர்களிடையே நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தர வரையறை. மைக்ரோசாஃப்ட் உட்பட பல மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆதரவினை இது பெற்றது.