பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wintel

492

Wordparser


Wintel:வின்டெல்: மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமையையும், இன்டெல் மையச்செயலகத்தையும் கொண்ட கணினி களைக் குறிக்கும் சொல்.

wired:பிணைப்புறு; இணைப்புறு: 1.ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக்கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன் படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்பியவாறு நிரல்படுத்தவோ,ஒரு நிலைமாற்றியின் மூலம் மாற்றியமைக்கவோ முடியாது. 2.இணைய வளங்கள், அமைப்புகள்,பண்பாடு பற்றி அறிந்திருத்தல். 3.இணையத்தோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.

wireframe:வலைப்புள்ளிச் சித்திரம்; கம்பிச் சட்டம்.

wiring diagram:கம்பி வரிப்படம்.

Wireless LAN:கம்பியில்லா லேன் : தனித்த கணுக் கணினிகளுக்கும் குவியத்துக்கும் (Nodes and Hub) இடையே பருநிலை இணைப்பு எதுவும் இல்லாமல், வானலை, அகச்சிவப்பு ஒளிச்சமிக்கை அல்லது பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவலை அனுப்பவும் பெறவும் முடிகிற குறும்பரப்புப் பிணையம். பயனர் ஒரு கையகக் கணினியை இங்கும் அங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்ற அலுவலக அல்லது தொழில்கூடச் சூழல்களில் கம்பியில்லா லேன் தொழில்நுட்பம் மிகவும் பயன்படக்கூடியது.

wire printer:கம்பி அச்சுப்பொறி.

wire-wrapper circuits: கம்பிசுற்றிய மின்சுற்றுகள்: அச்சிட்ட மின்சுற்றுப் பலகைகளில்,உலோக இணைப்புத் தடங்களுக்குப் பதிலாக, துளையிடப்பட்ட பலகைகளில் கம்பிகளால் இணைக்கப்படும் மின்சுற்று. இணைப்புக் கம்பிகளின் முனைகள் நீண்ட பின்களின் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இத்தகைய மின்சுற்றுகள் கையால் செய்யப்பட்டவை. மாதிரியங்களை உருவாக்கவும், மின்சாரப் பொறியியலில் ஆய்வுகளை மேற்கொள்ளவுமே இத்தகைய மின்சுற்றுகளைப் பயன்படுத்துவர்.

.wmf:.டபிள்யூஎம்எஃப்: நெறிய வரைகலை (vector graphics) அடங்கிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மீகோப்புகளை அடையாளங்காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).

Word Art:வேர்டு ஆர்ட்: எழிலான எழுத்துகளை உருவாக்க உதவும் மென்பொருள்.

word-addressable processor:சொல்-அழைதகு செயலி: நினைவகத்தில் ஒரு தனி பைட் அணுக இயலாத, ஆனால் பைட்களின் தொகுதியை அணுக முடிகிற ஒரு செயலி. ஒரு தனி பைட்டைக் கையாள வேண்டுமெனில் அந்த பைட் உள்ளடங்கிய நினைவகத் தொகுதியைப் படித்து எழுத வேண்டியதிருக்கும்.

Word Pad:வேர்டுபேடு: ஒரு சொல் செயலி மென்பொருள்.

word passing: சொல் பரப்பி.

word count:சொல் எண்ணிக்கை.

word search:சொல் தேடல்.

word parser:சொல் பகுப்பான்.