பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

words,reserved

493

World Wide Web consortium


words, reserved:ஒதுக்கீட்டுச்சொற்கள்.

work around:ஒப்பேற்றுதல்,சமாளித்தல்: ஒரு மென்பொருளில் அல்லது வன்பொருளில் பிழை அல்லது பிற குறைபாடுகள் இருப்பினும் அக்குறைபாட்டினை நீக்காமலே குறிப்பிட்ட பணியை ஒருவாறாகச் செய்து முடிக்கும் தந்திரம்.

Workbook:பணிப்புத்தகம்: எக்செல் போன்ற விரிதாள் பயன்பாடுகளில்,பல தொடர்புடைய பணித்தாள்களைக் கொண்ட ஒரு கோப்பு.

workflow application:பணிப்பாய்வுப் பயன்பாடு : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதி வரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து மேலாண்மை செய்வதற்கு உதவும் நிரல்களின் தொகுப்பு.

work offline: அகல்நிலை பணிசெய்.

workplace shell:ஒர்க்பிளேஸ் ஷெல்: பணியிட செயல்தளம்: ஒஎஸ்/2 இயக்க முறைமையின் வரைகலைப் பயனாளர் இடைமுகம். மேக்ஓஎஸ், விண்டோஸ் 95 போலவே ஒர்க்பிளேஸ் ஷெல்லும் ஆவணங்களை மையமாகக் கொண்டது. ஆவணக் கோப்புகள் சின்னங்களாகக் காட்டப்படும். ஒரு ஆவணச் சின்னத்தின்மீது சொடுக்கியதும் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு முதலில் திறந்து பின் அதில் ஆவணம் திறக்கப்படும். ஓர் ஆவணத்தை அச்சிட அந்த ஆவணத்துக்குரிய சின்னத்தை அச்சுப் பொறி சின்னத்தின்மீது இழுத்து விட்டால்போதும். ஒர்க்பிளேஸ் ஷெல், பிரசென்டேஷன் மேனேஜர் மென்பொருளின் வரைகலைச் செயல்கூறுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

World Wide Web or World-wide Web : வைய விரி வலை: உலக முழுவதிலுமுள்ள ஹெச்டிடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்படுகின்றன. இவை ஹெச்டிஎம்எல் மொழியில் எழுதப்பட்டவை. இவை யூஆர்எல் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஹெச்டிடீபீ நெறிமுறை மூலம் இவை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றில் மீத்தொடுப்புள்ள சொல்/சொல் தொடர்மீது சுட்டியால் சொடுக்க அதனால் சுட்டப்படும் இன்னோர் ஆவணம் பயனாளருக்குக் கிடைத்து விடுகிறது. அந்த இன்னோர் ஆவணம் ஒரு வரைகலைப் படமாகவோ, ஒலி,ஒளிக்காட்சிக் கோப்பாகவோ, ஜாவா குறுநிரலாகவோ, ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசையாகவோ இருக்கலாம். வலப்பக்கங்களைப் பார்வையிடும் பயனாளர் எஃப்.டீ.பீ வழங்கனிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஐரோப்பிய நுண்துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics CERN) பணிபுரிந்த டிமோத்தி பெர்னர்ஸ் - லீ (Timothy Berners - Lee) என்பவர் 1989-ஆம் ஆண்டில் வைய விரி வலையை உருவாக்கினார்.

World Wide Web Consortium: வைய விரிவலைக் கூட்டமைப்பு : வைய விரி வலை தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெறும் ஆய்வு