பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



X.25

496

xmodem 1k


X

X.25 :எக்ஸ்-25; பன்னாட்டுத் தொலைதொடர்பு தர வரையறை அமைப்பான ஐடீயு-டீ (முன்னாள் சிசிஐடிடீடீ) வெளியிட்டுள்ள பரிந்துரை. பொதி இணைப்புறு பிணையத்துக்கும், ஒரு முனையத்துக்கும் இடையேயான இணைப்பை வரையறுக்கிறது. எக்ஸ்.25 மூன்று வரையறைகளைக் கொண்டது. 1. பிணையத்துக்கும் முனையத்துக்கு மிடையே மின்சார இணைப்பு. 2. தகவல் பரப்புகை அல்லது தொடுப்பு-அணுகு நெறிமுறை. 3. பிணையப் பயனாளர்களிடையே மெய்நிகர் இணைப்புத் தடங்களை செயலாக்குதல். மூன்று வரையறை களும் இணைந்து ஓர் ஒத்திசைவான, முழு இருதிசை, முனை-பிணைய இணைப்பை வரையறுக்கின்றன. பொதி வடிவம், பிழைக் கட்டுப்பாடு மற்றும் பிற பண்புக்கூறுகள், ஐஎஸ்ஓ வரையறுத்த ஹெச்டிஎல்சி (High Level Data Link Control) நெறி முறையை ஒத்ததாகும்.

XCMD :எக்ஸ்சிஎம்டி: புறக்கட்டளை (External Command) என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினி களுக்காக உருவாக்கப்பட்ட, ஹைப்பர்கார்டு என்னும் மீ ஊடக நிரலின் புறக்குறிமுறை.

X Consortium :எக்ஸ் கூட்டமைப்பு: பல்வேறு வன்பொருள் நிறுமங்களின் கூட்டமைப்பு. யூனிக்ஸின் வரைகலை பணிச்சூழலான எக்ஸ் -விண்டோஸின் தர வரையறைகளை நிர்வகிக்கும் அமைப்பு. இப்போது ஒப்பன் குரூப்பின் எக்ஸ் பணித் திட்டக்குழு எக்ஸ் விண்டோஸ் அமைப்பின் பொறுப்புகளை வகிக்கிறது.

Xerox PARC: ஜெராக்ஸ் பார்க்: ஜெராக்ஸ் பாலோ ஆல்ட்டா ஆய்வு மையம் (Xerox Palo Alfo Research Center) என்பதன் சுருக்கம். கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்ட்டோவிலுள்ள ஆய்வு மற்றும் உருவாக்க மையத்தைக் குறிக்கிறது. குறும்பரப்புப் பிணையம் (LAN), லேசர் அச்சுப்பொறி, வரைகலைப் பயனாளர் இடைமுகம் (GUI) போன்ற நவீனக் கண்டுபிடிப்புகளின் பிறப்பிடம் ஜெராக்ஸ் பார்க்தான்.

XFCN :எக்ஸ்எஃப்சிஎன்: புறச் செயல்கூறு (External Function) என்பதன் சுருக்கம். முதன்மையான நிரலுக்கு வெளியே நிலவுகின்ற ஒரு கட்டளைத் தொகுதி. முதன்மையான நிரலிலிருந்து அழைப்பு வரும்போது இது செயல்படத் தொடங்கும். இது செயல்பட்டு முடிந்தவுடன் ஒரு மதிப்பினை முதன்மையான நிரலுக்குத் திருப்பி அனுப்பும். மெக்கின்டோஷ் கணினிகளுக்கான ஒரு மீஊடக (Hyper. media) நிரலான ஹைப்பர் கார்டு என்னும் நிரலில் எக்ஸ் எஃப்சி என்-கள் பயன்படுத்தப்படுகின்றன.

x link : எக்ஸ் - தொடுப்பு.

xmodem: எக்ஸ்மோடம்: ஒத்திசை யாத் தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு கோப்புப் பரிமாற்ற நெறிமுறை. இது தகவலை 128 பைட்டுகள் கொண்ட தொகுதிகளாக அனுப்பிவைக்கும்.

xmodem 1 k:எக்ஸ்மோடம் 1கே: கோப்புப் பரிமாற்ற நெறிமுறையான