பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xmodem-CRC

497

x-y-zcoordinate system


எக்ஸ்மோடத்தின் ஓர் உட்பிரிவு. தொலைதூர, மிகஅதிகத் தகவல் பரிமாற்றத்துக்காக வடிவமைக்கப்பட்டது. இதில், தகவல், 1 கிலோ பைட் (1024 பைட்) கொண்ட தகவல் தொகுதிகளாக அனுப்பப்படுகின்றது. மிகவும் நம்பிக்கைக்குரிய பிழைச் சரிபார்ப்பு நுட்பமும் கொண்டது.

xmodem-CRC:எக்ஸ்மோடம்-சிஆர்சி: எக்ஸ்மோடம் கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மேம்பட்ட பதிப்பு. தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிய, 2 பைட்டுகள் கொண்ட, சுழற்சி மிகைச் சரிபார்ப்பு (Cyclical Redundancy Check-CRC) முறையைக் கொண்டுள்ளது.

xon/xoff :எக்ஸ்ஆன்|எக்ஸ்ஆஃப்: எக்ஸ்நிகழ்/எக்ஸ்அகல் : ஓர் ஒத்திசையாத் தகவல் தொடர்பு நெறிமுறை. இதில், தகவலைப் பெறும் சாதனம்/கணினி, தகவலை அனுப்பும் சாதனம்/கணினியி லிருந்து தரவுப் பாய்வினைக் கட்டுப் படுத்த தனிச்சிறப்பான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தகவலைப் பெறும் கணினி தொடர்ந்து தகவலைப் பெற முடியவில்லை யெனில் எக்ஸ்அகல் கட்டுப்பாட்டுக் குறியீட்டை அனுப்பும். அதனைப் பெற்றவுடன் அனுப்பும் கணினி தகவல் அனுப்புவதை நிறுத்திக் கொள்ளும். இதுபோல எக்ஸ்நிகழ் சமிக்கை கிடைத்தவுடன் தகவலை அனுப்பத் தொடங்கும்.

xposition :எக்ஸ் நிலை; எக்ஸ்-அச்சு ஆயத்தொலை.

x-seriers :எக்ஸ் தொடர்.

x terminal :எக்ஸ் முனையம்: ஒர் ஈதர்நெட் பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள அறிவுநுட்பமுள்ள ஒரு காட்சிச் சாதனம். எக்ஸ்-விண்டோஸ் அமைப்பில் கிளையன் பயன்பாடு களிலிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் செயல்பாடுகளை நிகழ்த்தும்.

x-window system: எக்ஸ்விண்டோ சிஸ்டம் : எம்ஐடியில் உருவாக்கப்பட்ட, காட்சிப்படுத்தலைக் கை யாள்வதற்கான தரப்படுத்தப்பட்ட நிரல்கூறுகளின் தொகுப்பு. எந்த ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாதது. யூனிக்ஸ் பணிநிலையங்களில் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு குறிப்பிட்ட பொருளையோ, இலக்க முறைமையையோ சாராதது.

xy matrix :எக்ஸ்-ஒய் அணி: கிடைமட்ட அச்சும் (x-axis), செங்குத்து அச்சும் (y-axis) இணைந்து குறுக்கை/ நெடுக்கை கொண்ட ஒர் அமைப்பு.

x-y-z coordinate system:எக்ஸ்-ஒய்--இஸ்ட் ஆயத்தொலை அமைப்பு: முப்பரிமாண கார்ட்டீசியன் ஆயத்தொலை அமைப்பு. கிடைமட்ட (x), செங்குத்து (y) அச்சுகளுக்கு செங் கோணமாய் அமைந்துள்ள மூன்றாவது (z) அச்சினையும் கொண்டிருக்கும் இந்த x-y-Z ஆயத்தொலை அமைப்பு, கணினி வரைகலையில் நீளம், அகலம், ஆழம் கொண்ட மாதிரியங்களை உருவாக்கவும், முப்பரிமான வெளியில் மாதிரியங் களை நகர்ந்துசெல்லச் செய்யவும் பயன்படுகிறது.