பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ymodem

499

.yu


ymodem :ஒய்மோடம்: எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறி முறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்க்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோபைட் (1024பைட்) தகவல் தொகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் திறன் பெற்றது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை அனுப்பும் திறன் பெற்றது. சுழற்சி மிகைச்சரிபார்ப்பு (CRC) கொண்டது. கேன் (CAN) என்னும் குறியீட்டை இரு முறை தொடர்ச்சியாய் அனுப்பிய பின் கோப்புப் பரிமாற்றத்தை நிறுத்திவைக்கும்.

yocto: யாக்டோ: அமெரிக்க அள வீட்டு முறையில் ஒரு செப்டில்லியனில் ஒரு பகுதியைக் குறிக்கும் முன்னொட்டுச் சொல்.இது 10-24அளவுடையதாகும்.

Y/orientation:திசை முக்கோடு

Y position :ஒய் நிலை

yotta :யோட்டா :அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செப்டில்லியினைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டுச் சொல். இதன் அளவு 1034 ஆகும்.

yt; ஒய்டீ: ஓர் இணையதள முகவரி மயோட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.yu: ஒய்யு: ஓர் இணையதள முகவரி முன்னாள் யூகோஸ்லோவிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.