பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

z

500

zip


Z

.Z: இஸ்ட்: ஒரு கோப்பு வகைப் பெயர். ஜிஸிப் (gzip) மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட யூனிக்ஸ் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

.za : இஸ்ட்ஏ: ஓர் இணைய தள முகவரி தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ZD Net: இஸ்ட் டி நெட் ; தொழில் நுட்பம் சார்ந்த தனிச்சிறப்பான இணையக் குழுக்களையும், இலவச/ பகிர் மென்பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத்தளம். பீசி பயன்பாட்டாளர் களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப் டேவிஸ் பதிப்பகக் குழுவினர் நிகழ்நிலை தகவல் சேவையாக இதனை உருவாக்கினர்.

zero access storage :சுழி (பூஜ்ய) அணுகு சேமிப்பகம்.

zero output signal : சுழி வெளிப்பாட்டு சமிக்கை (சைகை).

zero track sensor: சுழி தட உணர்வி.

zero wait state: காத்திருக்கத் தேவையில்லாமை, சுழி காத்திருப்பு நேரம்; காத்திருப்பற்ற நிலை குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM), செயலியானது காத்திருக்க வேண்டிய தேவையில்லாத அளவுக்கு வேகமாய்ச் செயல்படும் நிலை.

zetta:ஸெட்டா: அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செக்ஸ்டில்லியனைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டு அளவீட்டுச் சொல். ஒரு செக்ஸ்டில்லியன் என்பது 1021 ஆகும்.

zepto:ஸெப்டோ: அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செக்ஸ் டில்லியனில் ஒரு பங்கு என்பதைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டுச் சொல். இதன் மதிப்பு 10-21 ஆகும்.

zero divide:சுழி வகுத்தல் : வகுத்தல் கணக்கீட்டில் வகுக்கும் எண் சுழியாக (ஜீரோவாக) இருத்தல். எந்தவோர் எண்ணையும் சுழியால் வகுத்துவரும் விடையைக் கணினி வழியாகக் கணிக்க முடியாது. எனவே ஒரு கணினி நிரலில் இது போன்ற கணக்கீடு அனுமதிக்கப்படமாட்டாது. இது ஒரு பிழையாகவே கருதப்படும்.

zit socket : ஸிஃப் பொருத்துவாய் : செருகச் சக்தி தேவையில்லா செருகு வாய் என்று பொருள்படும் Zero Insertion-force Socket என்பதன் சுருக்கம். ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகைகளுக்கான ஒருவகைப் பொருத்துவாய். ஒரு சிறிய நெம்பு கம்பி அல்லது திருப்புளி கொண்டு மெல்லத் திறந்து சிப்புவைச் செருகு வாயில் வைத்துவிட்டால் போதும், இறுகப் பற்றிக் கொள்ளும். பிற செருகுவாய்களில் சிப்புவை அழுத்திச் செருக வேண்டும். அடிக்கடி எடுத்துப் போட வேண்டிய சில்லுகளுக்கு/ அட்டைகளுக்கு ஸிஃப் பொருத்து வாய் உகந்தது. ஆனால் இவை அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். மரபுமுறைச் செருகுவாய்களைவிடச் செலவு அதிகமாகும்.

Zip:ஸிப் : பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள்