பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zip drive

501

zoom box


 கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர்.

zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய ஒரு வட்டு இயக்ககம். 3.5 அங்குல விட்டமுள்ள செருகுவட்டிலேயே

லிப் இயக்ககம்

(லிப் வட்டுகள்) 100 மெகாபைட் தகவலை எழுத முடியும்.

.zm : இஸட்எம் : ஓர் இணைய தள முகவரி ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

zmodem : இஸட்மோடம் : எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மேம்பட்ட வடிவம். அதிக அளவு தகவல் பரிமாற்றத்தைக் குறைந்த பிழையுடன் கையாளும். கோப்புப் பரிமாற்றம் எதிர்பாரா இடையூறு காரணமாய் இடையில் நின்றுபோய் மீண்டும் தொடங்கும் போது தொடக்கத்திலிருந்து தொடங்காமல் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் மீள்தொடங்கு குறியிடம் (checkpoint restart) என்னும் வசதியைக் கொண்டுள்ளது.

zone - bit recording : மண்டல பிட் பதிவு.

zone header : மண்டலத் தலைப்பு : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினைவகத் தொகுதி களை சிறப்பாகக் கையாள்வதற்கு இத்தகவல் உதவும்.

.ZOO : .ஸூ : கோப்பினை இறுக்கிச் சுருக்கும் ஸூ (zoo) என்னும்,மென்பொருள்கொண்டு இறுக்கப்பட்ட கோப்புகளை அடையாளம் காட்டும் கோப்பு வகைப் பெயர்.

zoo210 : ஸூ210 : கோப்புகளை இறுக்கிச் சுருக்கும் நிரலான ஸூ-வின் பதிப்பு 2.1 இவ்வாறு அழைக்கப்படுகிறது. இறுகிய கோப்புகளின் வகைப்பெயர் (extension) .zoo என இருக்கும். எல்ஹெச் ஆர்க் (LHARC) என்னும் நுட்பத்தின் அடிப்படையிலேயே ஸூ210-ன் படிமுறைத் தருக்கம் அமைந்துள்ளது. யூனிக்ஸ் மற்றும் இன்டெல் கணினிகளுக்கான ஸூ210 கிடைக்கிறது.

zoom box : ஸூம்பெட்டி; பெரிதாக்கும் பெட்டி : மெக்கின்டோஷ் கணினிகளில் திரையில் தோன்றும் ஒரு சாளரத்தின் சட்டத்தில் மேல் வலது மூலையில் காணப்படும் ஓர் இயக்குவிசை (control). பயனாளர் இப்பெட்டிமீது மாறிமாறிச் சொடுக்கும்போது, சாளரம் மீப்பெரும் அளவுக்கும், பயனர் முன்பு