பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

auto score

49

auxiliary storage


ஒரு கோப்பு இருக்க வேண்டும். குறுவட்டு, இயக்ககத்தில் செருகப்பட்டவுடன், விண்டோஸ் இக்கோப்பினைத் தேடும். (அவ்வாறு தேடும்படி நாம் முன்பே விண்டோசுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும்). அக்கோப்பு இருப்பின் அதில் குறிப்பிட்டுள்ள கட்டளைகளின்படி விண்டோஸ் செயல்படும். பெரும்பாலும் கணினியின் நிலைவட்டில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பை நிறுவுவதற்கான கட்டளையாக இருக்கும். ஒரு கேட்பொலிக் குறுவட்டினைச் செருகியவுடன் விண்டோஸ், பாடலைப் பாடவைக்கும் பயன் பாட்டை இயக்கி, குறுவட்டிலுள்ள முதல் பாடலை தானாகவே பாட வைக்கும்.

auto score : தானியங்கு அடிக் கீறிடல்.

autoshapes : உடனடி வடிவங்கள்.

auto run : உடனடிக் கூட்டல்.

autotext : உடனடி உரை

autotrace : தானியங்கு எல்லை வரைவு; தானியங்கு ஒரம் வரைதல் : படவரைவு நிரல்களிலுள்ள ஒரு வசதி. ஒரு நுண்மிப்பட (பிட்-மேப்) உருவப்படத்தை ஒரு பொருள்-நோக்கு(object-oriented) படமாக மாற்ற அதன் ஓரங்களில் கோடு வரைகிறது.

A/UX : ஏ|யூஎக்ஸ் : பல்பயனாளர், பல்பணி யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் படைப்பு. ஏடி&டீ யூனிக்ஸ் சிஸ்டம்V வெளியீடு 2.2 இயக்க முறைமையை அடியொற்றி உருவாக்கப்பட்டது. பல புதிய வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. பல்வேறு மெக்கின்டோஷ் கணினிகளில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. மெக்கின்டோஷின் பல்வேறு சிறப்புப் கூறுகளும் ஏ/யூஎக்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மெக்கின்டோஷ் டுல்பாக்ஸ் வசதி இதில் உண்டு. இதன்மூலம், பயனாளர்கள், வரை கலைப் பணிச் சூழலைப் (Graphical User Interface) பெறமுடியும்.

AUX : ஏயூஎக்ஸ் : கணினித் துணைச் சாதனங்களுக்குரிய தருக்கமுறைச் சாதனப் பெயர். எம்எஸ் டாஸ் இயக்க முறைமையில் வழக்கமான துணைச் சாதனத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெயர். பெரும்பாலும் இப்பெயர் கணினியின் முதல் தொடரியல்துறைக் குறிக்கும் காம் 1 (COM1) என்றும் இதனை அழைப்பர்.

auxiliary speakers : துணைநிலை ஒலிப்பிகள்.

auxiliary store : துணைநிலை சேமிப்பு.

auxiliary storage : துணைநிலை சேமிப்பகம் : வட்டு, நாடா போன்ற சேமிப்பகங்களைக் குறிக்கின்றது. கணினியின் நுண்செயலி நிலையா நினைவகத்தைப் போன்று இவற்றை நேரடியாக அணுகுவதில்லை. தற்போதைய வழக்காற்றில் இத்தகைய துணைநிலை சேமிப்பகங்கள் வெறுமனே சேமிப்பகம் என்றோ, நிலையான சேமிப்பகம் என்றோ அழைக்கப்படுகின்றன. நுண்செயலி தற்காலிகச் சேமிப்பகமாய் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையா நினைவக (RAM) சிப்புகள் வெறுமனே நினைவகம் என்றே குறிக்கப்படுகின்றன.