பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

background communication

52

banner


background communication : பின்புலத் தகவல் தொடர்பு

background printing : பின்புல அச்சிடல்; பின்னணி அச்சிடு முறை : ஒர் ஆவணத்தை அச்சிட அச்சுப்பொறிக்கு அனுப்பிவிட்டு கணினியில் வேறு பணிகளை மேற்கொள்ளும் முறை.

back-lit display : பின்-ஒளி திரைக்காட்சி : திரைக்குப் பின்னால் ஒளி படுமாறு அமைக்கப்பட்ட எல்சிடி திரைக் காட்சி. உருவங்கள் கூர்தெளிவாகவும், எழுத்துகள் நன்கு படிக்கும் படியும் இருக்கும். குறிப்பாக, சுற்றுப் புறம் மிகவும் ஒளியுடன் விளங்கும்போது இத்தகைய ஏற்பாடு பலன் தரும்.

backplan : பின்தளம்.

backquote : பின்மேற்கோள் குறி.

backspace character : பின் இட எழுத்து.

backup and restore : பாதுகாப்பும் மீட்டளிப்பும் : கோப்புகளை பாதுகாப்பு நகலெடுத்துச் சேமித்தலும், அவற்றை மீண்டும் அந்த இடத்திலேயே மீட்டளித்தலும்.

backup storage : பாதுகாப்புச் சேமிப்பகம்.

background tasks : பின்புலப் பணிகள்.

back volume : முன்தொகுதி.

backup utility : இனப்பெருக்கி: கணினி நச்சுநிரலில் ஒருவகை. தொடர்ந்து தன்னைத் தானே நகலெடுத்துக் கொள்ளும். இறுதியில் முழுக் கணினியையும் (சேமிப்பகம் முழுமையும்) இந்த நச்சுநிரலின் நகலே ஆக்கிரமித்திருக்கும்.

backward reasoning : பின்னோக்குக் காரணியம்.

bad block : பழுதுத் தொகுதி : நினைவகத்தில் பழுதான பகுதி. கணினியை இயக்கி வைக்கும் போது, நினைவகக் கட்டுப்பாட்டு பொறி சுயபரி சோதனை செய்து கொள்கையில் பழுதான தொகுதியை அடையாளங் காண்கிறது.

bad track : பழுதுத் தடம் : ஒரு நிலை வட்டில் அல்லது நெகிழ்வட்டில், பழுதான பிரிவைக் கொண்டுள்ள ஒரு தடம். இவ்வாறு பழுதெனக் குறிக்கப்பட்ட தடத்தை இயக்க முறைமை புறக்கணித்துச் செல்லும்.

balanced line : சமச்சீர் இணைப்புத் தடம் : முறுக்கிணைக் கம்பிகள் போன்ற தகவலனுப்பு தடம். அதிலுள்ள இரு மின்கடத்திகளும், சம அளவுள்ள எதிரெதிர் துருவமும்/ திசையும் கொண்ட மின் அழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் கொண்டிருப்பின் அது சமச்சீர் இணைப்புத் தடம் எனப்படுகிறது.

bandwidth on demand : தேவைக்கேற்ற அலைக்கற்றை : தொலை தொடர்பில் ஒரு தகவல் தடத்தில் தகவல் பரிமாறிக் கொண்டிருக்கும் போது, அத்தகவல் பரிமாற்றத்தின் தேவைக்கேற்ப கையாள் திறனை அதிகரித்துக் கொள்ளுதல்.

bank, data : தகவல் வாங்கி : தரவு வங்கி.

banner : பட்டிகை, பதாகை : 1. இணையத்தில் விலைப்பக்கத்தின் ஒரு பகுதியில் தோன்றும் விளம்பரப் பட்டிகை. பெரும்பாலும் ஒர் அங்குல அகலத்தில், வலைப்பக்கத்தின் நீளத்தில் காணப்படும். விளம்பரப் படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் வலைத் தளத்துக்கு அப்பட்டிகை