பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

banner page

53

batch processing mode


யில் ஒரு தொடுப்பு இருக்கும். 2. யூனிக்ஸ் இயக்க முறையில் உள்ள கட்டளை. கணினித் திரையின் ஒரு வரியில் 10 எழுத்துகள் வீதம் பெரிய எழுத்துகளில் செய்திகளைத் திரையிடலாம்.

banner page : பட்டிகைப் பக்கம் : 1. பெரும்பாலான அச்சு மென்பொருள்களினால் ஒவ்வொரு அச்செடுப்பின் போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப் பக்கம். பயனாளர் அடையாளத் தகவல், அச்சுப் பணியின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம் கொண்டிருக்கும். ஒரு அச்சுப் பணியை இன்னொன்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இப்பக்கம் பயன்படும். 2. மென்பொருள் தொகுப்பகளில் தொடக்கத்தில் தோன்றும் பக்கம். அத்தயாரிப்பைப் பற்றியும் அதைத் தயாரித்த நிறுவனம் பற்றியும் தகவல் இடம் பெற்றிருக்கும்.

bar : பட்டை.

bare bone : வெற்றெலும்பு; சிக்கனப் படைப்பு வேறெந்தக் கூடுதல் சிறப்புக் கூறுகள் எதுவுமில்லாத, கட்டாயத் தேவையான குறைந்த பட்சக் கூறுகளை மட்டுமே கொண் டுள்ள ஒரு கணினி அல்லது ஒரு மென்பொருள் தொகுப்பு. மென் பொருளெனில், கொடுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதற்கு உரிய செயல்கூறுகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு கணினி எனில் வேறெந்தக் கூடுதல் புறச்சாதனங்களும் இல்லாமல் கணினி இயங்கத் தேவையான மிகக்குறைந்த வன்பொருள் உறுப்புகளையே கொண்டிருக்கும். இயக்க முறைமை தவிர வேறெந்த மென்பொருளும் அக்கணினியில் இருக்காது.

base 2 : ஆதார எண் 2.

base 8 : ஆதார எண் 8.

base 10 : ஆதார எண் 10.

base 16 : ஆதார எண் 16.

base concept, data : தரவுத் தளக் கருத்துரு.

base, data : தகவல் தளம்; தரவுத்தளம்.

Base Management System, Data : தரவுத் தள மேலாண்மை அமைப்பு: சுருக்கமாக டிபிஎம்எஸ் (DBMS) எனக் குறிப்பிடுவர். டிபேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற மென்பொருள்களை இந்த வகையில் அடங்குவர்.

based system knowledge : அறிவுவழி அமைப்பு.

base notation: அடிப்படைக்குறிமானம்.

base number : அடிப்படை எண்.

base band coaxial cable : தாழ் அலைக்கற்றை இணையச்சு வடம்.

baseband transmission : தாழ் அலைக்கற்றை செலுத்தி; தாழ் அலைக்கற்றை அனுப்புகை.

basic language : பேசிக் கணினி மொழி.

BAT : பேட் : ஒரு கோப்பு வகை

.bat : பேட் : எம்எஸ்-டாஸ் இயக்க முறைமையில் தொகுதி நிரல் கோப்புகளை அடையாளங்காணப் பயன்படும் வகைப்பெயர் (Extention). .பேட் கோப்புகள் இயங்குநிலை கோப்புகளாகும். ஏனைய நிரல் கோப்புகளை அழைக்கும் கட்டளைகள்.பேட் கோப்பில் இடம் பெற முடியும்.

batch file transmission : கோப்புத் தொகுதி அனுப்புகை : ஒரேயொரு கட்டளைமூலம் கோப்புகளின் தொகுதியை அனுப்பி வைக்கப் பயன்படும் கட்டளை.

batch processing mode : தொகுதி. செயலாக்க பாங்கு.