பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.bc.ca

55

beginning of file


carbon copy) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.(bind courtesy copy என்றும் கூறுவர்)மின்னஞ்சலில் ஒரு மடலை பலருக்கும் அனுப்பலாம். பெறுநர் (TO) முகவரி இருக்குமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது CC என்ற கட்டத்துள் வேறுபலரின் முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது BCC என்ற கட்டத்துள்ளும் குறிப்பிடலாம். TO, CC ஆகியவற்றில் குறிப் பிடும் முகவரிதாரர்களுக்கு இந்த மடல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், BCC யில் குறிப்பிட்டுள்ள முகவரிதாரர்க்கு மடலின் நகல் கிடைக்கும். ஆனால் அந்த மடலின் நகல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது.

.bc.ca : .பிசி.சிஏ : ஒர் இணையத் தளம். கனடா நாட்டுப் பிரிட்டிஷ் கொலாம்பியாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

BCNF : பிசிஎன்எஃப் : பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் Boyce Codd Normal Form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தகவல் தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைமுறைகள் உள்ளன. அட்டவணைகள் அந்த வரையறையின்படி அமையவில்லையெனில் பின்னாளில் தகவல் தள மேலாண்மையில் சிக்கல் ஏற்படும். எனவே, அப்படிப்பட்ட அட்டவணைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் நான்கைந்து படிநிலைகளில் மேற்கொள்ளப்படவேண்டும்.பாய்ஸ்-காடின் முறை அதில் ஒரு படிநிலை.

.bd : .பிடி : வங்க தேசத்தைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

.be : .பிஇ : பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

beam splitter : கற்றை பிரிப்பான் .

beep statement : பீப் கூற்று.

bearer channel : தாங்கு தடம் :ஓர் ஐஎஸ்டிஎன் இணைப்பில் நடைபெறும் 64 kbps தகவல் தொடர்புத் தடங்களில் ஒன்று. ஒரு பிஆர்ஐ (Basic Rate Interface) ஐஎஸ்டிஎன் இணைப்பு 2 தாங்கு தடங்களையும் ஒரு தரவுத் (data) தடத்தையும் கொண்டுள்ளது. ஆனால் பிரைமரி ரேட் இன்டர்ஃபேஸ் (PRI) ஐஎஸ்டிஎன் இணைப்பு வட அமெரிக்காவில் 23 தாங்கு தடங்களையும் ஐரோப்பாவில் 30 தாங்கு தடங்களையும் ஒரு தகவல் தடத்தையும் கொண்டுள்ளன.

Be box : பி-கணினி, பி-பெட்டி : ரிஸ்க் (RISC) தொழில்நுட்ப அடிப்படையிலான மிகுதிறனுள்ள பவர்பிசி (PowerPC) நுண் செயலியைக் கொண்ட கணினி. பி நிறுவனம் (Be Inc.) உருவாக்கியது. பி நிறுவனத்தின் இயக்க முறைமையான பிஓஎஸ் (BeOS) நிறுவப்பட்டது. தற்போது மென்பொருள் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கருவியாக பி-கணினி விற்பனைக்கு வந்துள்ளது.

beginning of file : கோப்பின் தொடக்கம் : 1. ஒரு கோப்பில் முதல் எண்மி (பைட்)க்கு முன்பாக இடப்படும்