பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bell communications standards

56

bernoulli box


குறியீடு. கோப்பை உருவாக்கும் நிரல் இக்குறியீட்டை இடுகிறது. கணினியிலுள்ள இயக்க முறைமை இக்குறியீட்டைக் கொண்டுதான் ஒரு கோப்பின் தொடக்கத்தை அறிகிறது. கோப்பின் பிற இடங்களையும் இதனடிப்படையிலேயே கணக்கிட்டு அணுகுகிறது.2. ஒரு வட்டில் எழுதப்பட்டிருக்கும் கோப்பின் தொடக்க இடம். கோப்புகளின் தகவல்களைக் கொண்டிருக்கும் ஒரு கோப்பகம் (Directory) அல்லது திரட்டு இத்தொடக்க இருப்பிடத்தைக் கொண்டிருக்கும்.

Bell communications standards : பெல் தகவல் தொடர்பு தர வரையறை: தகவல் பரிமாற்றத்துக்கான பல்வேறு தர வரையறுப்பு களை 1970 களின் பின்பகுதியிலும் 1980 களின் முன்பகுதியிலும் ஏடீ&டீ நிறுவனம் வகுத்துத்தந்தது. வட அமெரிக்காவில் அவை பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இணக்கி (modem)களுக்கான சட்டபூர்வ தர வரையறைகளாக அவை காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 1200 bps வரையிலான இணக்கிகளுக்கு இத்தரவரையறை இருந்தது. இந்த வேக இணக்கிகள் இப்போது வழக்கொழிந்து விட்டன. 1200 bps-க்கு அதிகமான வேகமுள்ள இணக்கிகளுக்கு, சிசிஐடீடீ (CCITT) என்னும் அமைப்பு (இப்போது ITUCT) பரிந்துரை செய்யும் தர வரையறைகளே இப்போது உலகம் முழுவதிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

Bell compatible modem : பெல் ஒத்தியல்பு இணக்கி : பெல் நிறுவனத்தின் தரவரையறைகளுக்கு ஏற்பச் செயல்படும் ஒர் இணக்கி.

bells and whistles : அணி ஆபரணங்கள்; அலங்கார அணிகள் : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருளுக்கு அதன் அடிப்படை செயல்பாட்டுக்கும் அதிகமாகக் கவர்ச்சிகரமான வசதிகளை வழங்குவது. எடுத்துக்காட்டாக, ஒரு காரில் அமைக்கப்படும் மின் கதவையும் குளிர்சாதனக் கருவியையும் கூறலாம். கணினிகளைப் பொறுத்தமட்டில் இத்தகைய அலங்கார அணிகலன்கள் எதுவும் இல்லாத கணினியை சாதா வெனில்லா கணினி என்பர்.

benign virus : தீங்கில்லா நச்சுநிரல்:நச்சுநிரல் போன்ற பண்புடைய ஒரு நிரல். தன்னைத் தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும் பண்பில் நச்சுநிரலை ஒத்தது. மற்றபடி, அது தொற்றியுள்ள கணினிக்கு வேறெந்த தீங்கும் விளைவிக்காது.

BeOS : பீஓஎஸ் : பீ ஆப்பரேட்டிங் சிஸ்டம் (BeOS) என்பதன் குறும்பெயர். பீ நிறுவனம் (Be Inc) உருவாக்கிய பொருள் நோக்கிலான இயக்க முறைமை. பி-கணினி மற்றும் பவர் மெக்கின்டோஷ் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த இயக்க முறைமை சமச்சீர் பல் செயலாக்கம், பல்பணி மற்றும் பாதுகாக்கப்பட்ட நினைவகம் ஆகிய வசதிகளைக் கொண்டது. பல்லூடகம், அசைவூட்டம் மற்றும் தகவல் தொடர்புக்கு ஏற்றது.

bernoulli box : பெர்னவுலி பெட்டி : சொந்தக் கணினிகளில் பயன்படுத்தக்கூடிய, எளிதாகச் செருகி எடுக்கக்கூடிய நெகிழ்வட்டகம். அதிகமான சேமிப்புத்திறன் கொண்ட பேழையைக் கொண்டது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டேனியல்பெர்னவுலி (Daniel Bernoulli) என்ற