பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

biodata

60

bit bucket


அனுப்ப வேண்டிய தேவைகளுக்கு இம்முறை உகந்தது. பெரும்பாலான மேக் (Mac) கணினிப் பயனாளர்கள் பின்ஹெக்ஸ் முறையை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். 2. ஒர் இருமத் தகவல் கோப்பை, ஆஸ்கி உரைக் கோப்பாகவும், ஒர் ஆஸ்கிக் கோப்பை இரும வடிவக் கோப்பாகவும் மாற்றித் தருகின்ற ஆப்பிள் மெக்கின்டோஷ் நிரல்,

biodata : தகுதிக்குறிப்பு : தன்விவரக் குறிப்பு.

biosensors : உயிர் உணரிகள்.

biomic chips : உயிரியல் சிப்பு : உயிரியல் சில்லு,

bipolar read only memory : இரு துருவ படிக்கமட்டுமான நினைவகம்.

bistable circuit : இருநிலை மின்சுற்று : இரண்டே இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நிலைக்கும் மின் சுற்று. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற, மின்சுற்றுக்கு வெளியிலிருந்து தூண்டப்பட வேண்டும். ஒர் இருநிலை மின்சுற்று, ஒரு துண்மி(பிட்) தகவலை இருத்தி வைக்கும் திறனுடையது.

bistable magnetic core : இருநிலை காநத உள்ளகம.

bit newsgroups : துண்மி செய்திக் குழுக்கள், துண்மி செய்தி அரங்குகள் : பிட் நெட்டிலுள்ள சில அஞ்சல் பட்டியல் அல்லது அஞ்சல் குழுக் களின் (maing list) உள்ளடக்கத்தைப் பிரதிபிம்பமாய் தம்மகத்தே கொண்டுள்ள இணைய செய்திக் குழுக்களின் படிமுறை.

bit block : துண்மித் தொகுதி பிட் தொகுதி : கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஒர் அலகாகக் கருதப்படுகின்றன. படப்புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் குறிக்கும் துண்மிகளின் தொகுப்பு என்பதால் இப்பெயர் பெற்றது. நிரலர்கள் துண்மித் தொகுதிகளையும், துண்மித் தொகுதி இடமாற்ற நுட்பத்தையும் பயன்படுத்தி, கணினித் திரையில் மின்னல் வேகத்தில் உருவங்களை அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம், பட உருவங்கள் இயங்குவதுபோலச் செய்ய முடியும்.

bit block transfer : துண்மித் தொகுதி இடமாற்றம் : வரைகலைத் திரைக் காட்சியிலும், இயங்குபடங்களிலும் செவ்வகத் தொகுதியாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய சுட்டுக்குறி (cursor) யாகவோ, ஒரு கார்ட்டுன் படமாகவோ இருக்கலாம். இத்தகைய துண்மித் தொகுதியை ஒற்றை அலகாக ஒளிக்காட்சி நினைவகத்தில் நகர்த்துவதன் மூலம் கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிவேகமாய் திரையிட முடியும். துண்மிகளின் மதிப்புகளை மாற்றுவதன் மூலம் உருவப்படங்களில் ஒளிப்பகுதியை மாற்ற முடியும். தொடர்ச்சியாக அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம் பட உருவங்களின் தோற்றத்தை மாற்ற முடியும். நடமாடுவது போலச் செய்யவும் முடியும்.

bit bucket : துண்மிக் கூடை, துண்மிக் குப்பைத் தொட்டி : தகவலை கழித்துக்கட்டப் பயன்படுத்தப்படும் ஒரு கற்பனை இடப்பகுதி. வெற்று