பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bit check

61

bit slice microprocessor


(null) உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனம் எனலாம். இதில் போடப்படும் விவரங்களைப் படித்தறிய முடியாது. டாஸ் இயக்க முறைமையில் இந்தத் துண்மிக் குப்பைத்தொட்டி நல் (null) என்று அறியப்படு கிறது. யூனிக்ஸ் இயக்க முறைமையில், /dev என்னும் கோப்பகத்தில் இத்தகைய வெற்றுச் சாதனக் கருத்துரு உண்டு. ஒரு கோப்பகத்திலுள்ள கோப்புகளின் பட்டியலை வெற்றுச் சாதனத்துக்கு அனுப்பும் போது, பட்டியல் திரையில் தெரியாமல் மறைந்து விடுகிறது. இயக்க முறைமை தருகின்ற பிழைசுட்டும் அல்லது பிறவகைச் செய்திகளை திரையில் காட்டப்படாமலிருக்கும் பொருட்டு அச்செய்திகளை வெற்றுச் சாதனம் என்னும் குப்பைத் தொட்டிக்கு அனுப்பி வைப்பதுண்டு. C:\>Copy File1 File2 > NUL என்ற டாஸ் கட்டளை கோப்பை நகலெடுத்த பிறகு 1 File(s) copied என்னும் செய்தியைத் திரையில் காட்டாது.

bit check : துண்மிச் சரிபார்ப்பு.

bit depth : துண்மி ஆழம் : வரைகலைக் கோப்பில் நிறத் தகவலைப் பதிவுசெய்ய ஒரு படப் புள்ளிக்கு ஒதுக்கப்படும் துண்மி களின் எண்ணிக்கை.

bit error rate : துண்மி பிழைவீதம்.

bit error single : துண்மி தனிப்பிழை.

bit image : துண்மிப் படிமம்.

bit length : துண்மி நீளம்.

bit location : துண்மி இருபிடம்.

bitபmap display : துண்மி நிலைப்படக்காட்சி.

bitmap scanning : துண்மி நிலைப்பட வருடல்.

BitNet : பிட்நெட் : ஏனெனில் அது நேரப் பிணையம் என்ற பொருள் தரும் Because it's Time Network என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981ஆம் ஆண்டில் வாஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட விரிபரப்புப் பிணையம் (WAN). ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிணையக் கழகம் (CREN - Corporation for Research and Educational Networking) இதனைப் பராமரித்து வந்தது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களின் பெருமுகக் கணினி அமைப்புகளிடையே (main frames) மின்னஞ்சல் மற்றும் கோப்புப் பரிமாற்றங்களுக்காக இப் பிணையம் பயன்பட்டது. பிட்நெட், டிசிபீ/ஐபீ நெறிமுறைக்குப் பதிலாக,ஐபிஎம்மின் பிணையப் பணி உள்ளீடு என்ற பொருள்படும் Network Job Entry (NJE)என்னும் தகவல் பரிமாற்ற நெறிமுறையைப் பயன்படுத்தியது. இன்றைக்கு இணையத்தில் அஞ்சல் குழுக்களைப் (mailing lists) பராமரிக்கப் பயன்படும் லிஸ்ட்செர்வ் (Listserve) என்னும் மென்பொருள் தொகுப்பு பிட்நெட்டில் உருவாக்கப்பட்டது.

bit parity : துண்மிப் பொருத்தம் ; துண்மிச் சமநிலை.

bit position : துண்மி இட நிலை.

bit sign : துண்மி அடையாளம்.

bit slice microprocessor : துண்மித் துண்டு நுண்செயலி : பொதுவாக நுண்செயலிகள் எட்டுத்துண்மித் தொகுதிகளையே (ஒரு பைட் = 8 பிட்டுகள்) கையாள்கின்றன. 2 பிட்டு கள், 4 பிட்டுகளில் ஆன தகவல்களைக் கையாளவும் முடிகிற நுண்செயலி துண்மித் துண்டு நுண்செயலி