பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
blue screen
boldface
64

blue screen : நீலத் திரை : திரைப்படங்களில் ஒர் உருப்படத்தின் மீது இன்னோர் உருப்படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத்திரைக்கு முன்னால் ஒரு காட்சியை அல்லது ஒருவரின் நடிப்பைப் படம் பிடித்துக்கொள்வர். அடுத்து, விரும்புகின்ற பின்புலத்தைத் தனியாகப் படமெடுப்பர். முதலில் எடுத்த காட்சியை இந்தப் பின்புலத்தின் மீது பதியச் செய்வர். இப்போது குறிப்பிட்ட பின்புலத்தில் அக்காட்சி நடைபெறுவதுபோல இருக்கும். ஒருவர் நடந்துசெல்வதையும் பாலைவனத்தையும் தனித்தனியே படம்பிடித்து, அவர் பாலைவனத்தில் நடப்பது போலக் காட்டி விட முடியும்.

block structured language : தொகுதிக் கட்டமைப்பு மொழி.

block, variable : மாறு தொகுதி

.bm , பிஎம் : ஒர் இணையதள முகவரியில், அத்தளம் பெர்முடா நாட்டில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பிரிவு.

.bmp : .பி.எம்.பீ : துண்மி வரைபடக் கோப்புப் படிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள, ராஸ்டர் வரைகலைக் படத்தைச் சுட்டும் ஒரு கோப்பின் வகைப் பெயர் (extension).

.bn : பிஎன் : ஒர் இணைய தளம் புரூணை தாருஸ்ஸலாமில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டும் பெருங்களப் பிரிவின் பெயர்.

BNC connector : பிஎன்சி இணைப்பி : கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப்பயன்படுகிறது. வண்ணத் தொலைக்காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகுவாயில் செருகி 90 திருப்பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.

.bo : .பிஓ : ஒர் இணைய தளம் பொலீவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க, முகவரியின் இறுதியில் குறிக்கப்படும் பெருங்களப் பெயர்.

body ; உடற்பகுதி : இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்பகுதியிலும் இடம் பெறுகின்றன.

body face : உடற்பகுதி எழுத்து வடிவம் : ஒர் ஆவணத்தை உருவாக்கும்போது முகப்புத்தலைப்பு, ஆவணத்தலைப்பு, பத்தித்தலைப்புகள் பெரிய/தடித்த எழுத்தில் அமைகின்றன. உடற்பகுதியில் அமையும் தகவல்கள் ஒரளவு சிறிய எழுத்தலேயே அமைய வேண்டும். உடற்பகுதிக்கு ஏற்ற வடிவத்தை உடற்பகுதி வடிவம் என்கிறோம். சேன் செரீஃப், டைம்ஸ் நியூரோமன் போன்ற எழுத்துருக்கள் (fonts) உடற்பகுதிக்கு ஏற்றவை.

body type : உடல்வகை மாதிரி

boiler plate : கொதிகலத்தகடு

boldface : தடித்த எழுத்து : சாதாரண எழுத்தைவிடத் தடித்துத் தோன்றும் எழுத்து. ஆவணத்தில் உள்ள உரை