பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
bold italics
boot failure
65

யில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து தடிமன் என்ற கட்டளை தரும்போது, அப்பகுதி முழுவதும் தடித்த எழுத்துகளாகி விடும்.

bold italics : தடித்த சாய்வெழுத்து .

bold printing : தடித்த அச்சடிப்பு.

book keeping : கணக்கு வைப்பு.

bookmark : பக்க அடையாளக்குறி : நினைவுக்குறி : 1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஒர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டுவைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையப் பக்கம் அல்லது இணைய முகவரிக்கு, பின்னால் மீண்டும் காணும் பொருட்டு ஒரு தொடுப்பினை நிலைவட்டுக் கோப்பில் குறித்து வைத்துக் கொள்வது.

bookmark file : அடையாளக் குறிக்கோப்பு : 1.நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் உலாவியில் இது ஒரு கோப்பு. நமக்குப் பிடித்தமான வலையகங்களின் முகவரிகளைக் கொண்டது. இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் விருப்பத் தளங்களின் கோப்புறை (Favourites Folder) எனப்படுகிறது. சூடான பட்டியல் (hotlist) என்றும் அழைக்கப்படுவதுண்டு. 2.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, ஹெச்டிஎம்எல் வடிவத்தில் ஒரு பக்கத்தில் வெளியீடு செய்யப் படுகின்ற, நாம் விரும்பிப் பார்த்த வலையகங்களின் முகவரிகள் அடங்கிய கோப்பு.

bool type : தருக்க இனம்,

boolean : பூலியன் : பெரும்பாலான கணினி மொழிகளில் பயன்படுத்தப்படும் தரவு இனம் (data type), உண்மை/பொய், சரி/தவறு, ஆம்/ இல்லை என்பதுபோன்ற இரண்டிலொரு மதிப்புகளையே இந்தத் தரவு இனம் ஏற்றுக் கொள்ளும்.சில மொழிகளில் நேரடியாகவே பூலியன் என்னும் தகவல் இனம் உண்டு. சரி, தவறு ஆகிய மதிப்புகளில் ஒன்றை இருத்திவைக்க முடியும். வேறுசில மொழிகளில் நேரடியான பூலியன் இனம் கிடையாது. சுழி என்னும் பூஜ்யம் தவறு எனவும், சுழியல்லாத மதிப்பு சரி எனவும் கையாளப்படுகிறது. பூலியன் குறிக்கணிதத்தை உருவாக்கிய ஆங்கிலக் கணிதமேதை ஜார்ஜ் பூல் (George Bool) அவர்களின் பெயரில் இது அமைந்துள்ளது.

boolean calculus : பூலியன் கணக்கீடு.

boolean complementation : பூலியன் நிரப்புகை.

boolean operation, binary : இரும பூலியன் செயற்பாடு.

bootable : இயக்க முறைமை ஏற்றிய: இயக்க முறைமைக் கோப்புகள் பதியப்பட்டு கணினியை இயக்கி வைக்கப் பயன்படுகின்ற நெகிழ்வட்டைக் குறிக்கும்.

boot block : இயக்கத்தொடக்கப்பகுதி : இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் ஆணைகளையும், கணினியை இயக்கிவைக்கும் ஏனைய தகவல்களையும் பதித்து வைத்துள்ள வட்டுப் பகுதி.

boot failure : இயக்கத்தோல்வி : கணினியை இயக்க முற்படும்போது, இயக்க முறைமையை வட்டில் கண்டறிந்து நினைவகத்தில் ஏற்றிக் கணினி இயக்கத்தைத் தொடக்கி வைக்க முடியாமல் போகும்போது இத்தகைய தோல்வி நேருகிறது.