பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poot partition

66

bottom-up design


boot partition : இயக்க பாகப்பிரிவு : இயக்க முறைமைக் கோப்புகள் மற்றும் துணைக்கோப்புகள் எழுதப்பட்டுள்ள வட்டுப்பகுதி. கணினியை இயக்கும்போது அல்லது புத்துயிரூட்டும் போது இக்கோப்புகள் நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன.

boot protocol : இயக்க நெறிமுறை : ஆர்எஃப்சி 951 மற்றும் 1084 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறை. வட்டில்லாத பணி நிலையக் கணினிகளை இயக்க வைக்கப்பயன்படுகிறது. பூட்பீ (BootP) என்றும் கூறுவர்.

boot sector : இயக்க வட்டக்கூறு : இயக்க வட்டுப்பிரிவு : ஒரு வட்டு பல்வேறு வட்டக்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி ஆணைத்தொடர் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக்கூறு எனப்படுகிறது. கணினிக்கு மின்சாரம் வழங்கியதுமே இந்த ஆணைத்தொடர் தானாகவே செயல்படும். வட்டில் பதியப்பட்டுள்ள இயக்க முறைக்கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை நினைவகத்தில் ஏற்றும் பணியை இச்சிறிய நிரல் செய்து முடிக்கிறது.

bootup disk : இயக்கும் வட்டு .

Border Gateway Protocol : எல்லை நுழைவி நெறிமுறை : இன்றைய இணையத்தின் முன்னோடியாக விளங்கிய என்எஸ்எஃப்நெட் பிணையத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற நெறிமுறை. புறநுழைவி நெறிமுறை (External Gateway Protocol)யின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.சுருக்கச்சொல் பிஜிபீ(BGP) ஆகும்.

border layout : கரை உருவரை.

border properties : கரைப் பண்புகள்.

boss screen : முதலாளியின் திரைக்காட்சி ; மேலதிகாரியின் திரைத்தோற்றம் : அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக் கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்பட்டபின், அலுவலக ஊழியர்கள் பணிநேரத்தில் கணினி விளையாட்டுகளில் மூழ்கி விடுவது வாடிக்கையாக நிகழும் ஒன்று. அந்த நேரம் முதலாளி அல்லது மேலாளர் அங்கே வந்து விட்டால், உடனடியாக கணினித் திரையில் ஒரு புதிய தோற்றத்தை வரவழைத்துவிடுவர். இது போல முதலாளி/மேலதிகாரி வரும்போது காட்டுவதற்கென்றே டாஸ் விளையாட்டுகளில் தனிச்சிறப்பான திரைத் தோற்றங்கள் இருந்தன. அதில் பெரும்பாலும் வணிகம் தொடர்பான விவரங்கள் காணப்படும். இப்போதுள்ள மேக், விண்டோஸ், லினக்ஸ் பணித்தளத்தில் இத்தகைய சிக்கல் இல்லை. நொடியில், ஒரு சுட்டிச் சொடுக்கில் திரைத் தோற்றத்தை மாற்றிவிட முடியும்.

boot sequence : இயக்கும் முறை விசை .

bottleneck : இடர்ப்பாடு.

bottom-up design : கீழிருந்து-மேல் வடிவமைப்பு : ஒரு மென்பொருள் பயன்பாட்டை உருவாக்குவதில் பின்பற்றப்படும் வடிவமைப்புச் செயல்முறை. முதலில் கீழ்நிலைப் பணிகளுக்கான நிரல்வரைவும், பிறகு அவற்றை அடிப்படையாகக்கொண்டு