பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bucket sort

71

bulk eraser


உறுப்பு பட்டியலின் உச்சிக்குக் கொண்டுவரப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

bucket sort : கலன் வரிசையாக்கம்.

budgeting : வரவுசெலவுத்திட்டமிடல்.

buffer amplifier : இடையகப் பெருக்கி.

buffer card punch : இடையக துளை அட்டை.

buffer storage : இடைநிலைச் சேமிப்பு : இடைநிலை தகவல் தேக்கம் : 1. ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதியை, இயக்க முறைமையோ, ஒர் ஆணைத் தொடரோ பயன்படுத்திக் கொள்ளத் தயாராகும் நேரம்வரை, கணினி நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் முறை. 2. ஒரே வேகத்தில் செயல்படாத இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெறும்போது, தகவல் எடுத்தாளப்படும் வரை சிறிதுநேரம் தற்காலிகமாகத் தேக்கி வைக்கும் இடம். விசைப் பலகையிலிருந்து வரும் தகவலை செயலி படிக்கும்போது, அச்சுப் பொறிக்குத் தகவல் அனுப்பப்படும்போது, வட்டிலிருந்து தகவலைப் படிக்கும் போது, வட்டில் தகவல் எழுதப்படும் போது மற்றும் இதுபோன்று வேக வேறுபாடுள்ள இரு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு இடைநிலை தகவல் தேக்கம் அவசியமாகும்.

buggy : முற்றப் பிழையான ; முழுக்கப் பிழையான ; பிழைகள் மலிந்த மென்பொருளைக் குறிக்கப்பயன்படும் சொல்.

building block principle : உறுப்புத் தொகுதிக் கோட்பாடு.

built-in : உள்ளிணைக்கப்பட்ட.

built-in check : உள்ளிணைந்த சரிபார்ப்பு.

built-in font : உள்ளிணைந்த எழுத்துரு.

built-in function : உள்ளிணைந்த செயற்பாடு.

built-in groups : உள்ளிணைந்த குழுக்கள் ; உள்ளிணைந்த உரிமைத் தொகுதிகள் : விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டீ உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கான அனுமதியும் உரிமைகளுமே வழங்கப்படுகின்றன. அத்தகைய உரிமைகளுள் குறிப்பிட்ட சிலவற்றை ஒரு தொகுதியாக வைத்துக்கொள்வதால், ஒரு பயனாளருக்கு அத்தொகுதி உரிமையை வழங்குவது எளிமையாக இருக்கும். குறிப்பிட்ட பொது வான உரிமைகள் பெற்ற பயனாளர் குழுக்களை உருவாக்குவதும் எளிதானது.

built-in pointing device : உள்ளிணைந்த சுட்டு சாதனம்.

bulk eraser : முழுக்க நீக்கல் ; முற்றத் துடைத்தல் ; ஒட்டுமொத்தமாய் அழித்தல் : நெகிழ்வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்தமாய் அழிக்கப் பயன்படும் செயல்முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின் காந்த முறையில் தகவல் பதியப்படுகிறது. எனவே, சக்திவாய்ந்த மின்காந்தப் புலத்தை உருவாக்கு வதன் மூலம் மின்காந்த ஊடகத்திலுள்ள இரும்புத் துகள்களைச்