பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bullet proof

72

business information system


சிதைத்து தகவலனைத்தையும் துடைத்திட முடியும்.

bullet proof : பிழைதடுப்புத் திறன் : வேறொரு கணினியின் வன்பொருள் குறைபாடுகளால் நல்லபடியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கணினிச் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தடுத்துக் காக்கும் திறன்.

bullets and numbering : பொட்டும் எண்ணிடலும்.

burst mode : வெடிப்பு முறை : தகவல் அனுப்பும் முறைகளுள் ஒன்று. இம்முறையில் பல்வேறு பிரிவுகளிலிருந்து வரும் தகவல் களை ஒருங்கிணைத்து ஒரே தொகுதியாக அதிவேகத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. தகவல் தொடர்பிலும் கணினிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திலும் வெடிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.

burst speed : வெடிப்பு வேகம் : 1. வெடிப்பு முறை தகவல் பரிமாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தகவலை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல்வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெடிப்பு முறையில் தகவல் பொட்டலங்களை அனுப் பும்போது அதன் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கப்படுகிறது. 2. ஒர் அச்சுப்பொறி அடுத்தவரிக்கு வராமல் ஒரே வழியில் ஒரு வினாடி நேரத்தில் அச்சடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை. தாளைத் தள்ளும் நேரம், அச்சுமுனை அடுத்தவரிக்கு வர எடுத்துக்கொள்ளும் நேரம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடப்படும் வேகம் இது. அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் கூறிக்கொள்ளும் அச்சிடும் வேகம் உண்மையில் அதன் வெடிப்பு வேகத்தைத்தான். ஆனால், உண்மையில் அச்சுப்பொறியின் செயல்திறன் ஒரு பக்கம் முழுமையும் அடிக்க எடுத்துக் கொள்ளும் மொத்த நேரத்தைக் கொண்டே கணக்கிடப்படும்.

bursty : வெடிப்பி ; வெடிப்பு முறை : தகவல் பரிமாற்றத்தில் தொடர்ச்சியாகத் தரவை அனுப்புவதற்குப் பதில் வெடிப்பு முறையில் துண்டு துண்டாக அனுப்பும் முறை.

bus architecture : மின்பாட்டைக் கட்டுமானம்.

bus enumerator : மின்பாட்டைக்கணக்கெடுப்பி : ஒரு குறிப்பிட்ட மின்பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களையும் கண்டறிந்து ஒவ்வொன்றுக்கும் தனித்த அடையாளக் குறியீடு அளிக்கவல்ல ஒரு சாதன இயக்கி (device driver) ஆணைத்தொகுப்பு. ஒரு கணினியை இயக்கியவுடன், கணினியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சாதனங்களின் தகவல்களையும் நினைவகத்தில் ஏற்றும் பணியை இக்கணக்கெடுப்பியே கவனித்துக் கொள்கிறது.

business information system : வணிகத் தகவல் முறைமை ; வணிகத் தகவல் அமைப்பு : ஒரு நிறுவனத்திலுள்ள கணினிகள், அச்சுப்பொறிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தகவலைக் கையாளும் ஏனைய சாதனங்களையும் உள்ளடக்கிய ஒர் அமைப்பு. முற்றிலும் தானியங்கி மயமாக்கப்பட்ட வணிகத் தகவல் அமைப்பு, தகவலைப் பெறுகிறது ; அலசி ஆய்கிறது; சேமிக்கிறது. தேவையானபோது அனுப்பி வைக்கிறது. தேவைப்படும்போது