பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

callback

76

called terminal


நாள் காட்டிகளை ஒத்துள்ளன. சிலவற்றில், ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திலும் நினைவுக் குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்ள முடியும். காலங்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி நமது பணியை நமக்கு நினைவூட்டவல்ல நிரல்களும் உண்டு. ஒரு கணினிப் பிணையத்தில், ஒர் அலுவலகத்தின் பல்வேறு அலுவலர்களின் காலங்காட்டிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் திறனுள்ள நிரல்களும் உள்ளன.

caliback : திரும்ப அழைப்பு : தொலைபேசி மூலமாக அணுகும் ஒரு கணினியில் பயனாளரை அடையாளங்காணும் ஒரு பாதுகாப்பு முறை. ஒரு பயனாளர் கணினி அமைப்பை தொலைபேசி மூலமாக அணுகுகிறார். அடையாளப் பெயரையும் நுழைசொல்லையும் தருகிறார். உடனே இணைப்புத் துண்டிக்கப் பட்டுவிடும். கணினி, முன்பே குறித்து வைத்துள்ள அந்தப் பயனாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தானாகவே தொடர்பு கொண்டு, இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பாதுகாப்பு முறை, அத்துமீறி நுழையும் ஊடுருவிகளைத் தடுக்கிறது. ஒரு பயனாளரின் நுழைபெயரையும், நுழைசொல்லையும் இன்னொருவர் திருடினாலும் அதனைப் பயன் படுத்திக்கொள்ள முடியாது.

callback modem : திரும்ப அழைக்கும் இணக்கி : திரும்ப அழைப்புப் பாதுகாப்பு முறையில் பயன்படுத்தப்படும் இணக்கி. வெளிலிருந்து தொலைபேசிமூலம் கணினி அமைப்பை அணுகும்போது பயனாளர் ஒரு மறைக்குறியீட்டைத் தருவார். ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அட்டவணையில் மறைக்குறியீடு சரிபார்க்கப்பட்டு அக்குறியீட்டுக்குரிய பயனாளரின் தொலைபேசி எண்ணைத் தானாகவே தொடர்புகொண்டு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

calculate : கணக்கிடு; மதிப்பிடு.

calculus boolean : பூலியன் வகையீட்டு நுண்கணிதம்

callable statement : அழைதகு கூற்று

caller ID : அழைத்தவர் அடையாளம்.

call accepted packet : அழைபேற்புப் பொட்டலம்; அழைப்பேற்ற பொதிவு.

call blocking : அழைப்புத்தடுப்பி

call connected packet : அழைப்பு இணைத்த பொதிவு.

call cleaning : அழைப்பு நிறைவேற்றம்

call establishment : அழைப்பு ஏற்படுத்துகை அழைப்பு நிறுவுகை,

CALS : கால்ஸ் : கணினிவழி ஈட்டுதல் மற்றும் தகவுப் பொருத்த உதவி என பொருள்படும் Computer Aided Acquisition Logistics Support என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்து அழைப்பு குறும்பெயர். வணிகமுறை விற்பனையாளர்களுடன் மின்னணு முறை தகவுப் பரிமாற்றத்துக்கான பாதுகாப்புத் தர நிர்ணயத் துறையாகும்.

calligraphic sequence : எழுத்து வனப்பு வரிசைமுறை; வரிவடிவ வரிசைமுறை.

call request packet : அழைப்புக் கோருவோர் பொதிவு.

call screening : அழைப்பு வடிகட்டல்

cal setup : அழைப்பு அமைப்பு முறை.

called terminal : அழைக்கப்பட்ட முனையம்.