பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

canvas

78

bit


canvas : வரைதிரை.

capability : திறன்; ஆற்றல்.

capacity, memory : நினைவகக் கொள்திறன்.

caps (key) : தலைப்பெழுத்து(விசை); மேல் எழுத்து (விசை).

caps lock : தலைப்பெழுத்துப் பூட்டு.

card format : அட்டை வடிவமைப்பு.

caption : தலைப்பு.

capture, data : தரவுக் கவர்வு.

capture card and display card : பதிவு அட்டை மற்றும் காட்சி அட்டை.

card formate : அட்டை வடிவம்.

card job controle : வேலைக்கட்டுப்பாட்டு அட்டை

card loader : அட்டையேற்றி.

card punch buffer : அட்டைத் துளை இடையகம்.

card punching : அட்டை துளையிடல்.

card reader : அட்டை படிப்பி: 1. இது ஓர் உள்ளிட்டுச் சாதனம். பெரும் பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன்படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும் கருவி. ஒரு தொழிலாளியின் அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது பற்று அட்டை (credit card)யாக இருக்கலாம். 2. கணினி செயல்படாத நேரத்தில், அட்டைகளில் துளையிடும் முறையில் எழுதப்பட்ட தகவலைப் படித்தறியும் கருவி. இப்படிச் செய்வதன் மூலம் மையச்செயலியின் நேரம் பெருமளவு மிச்சமாகும். கணினி செயல்படும்போது, தகவலை உள்ளீடு செய்யும் முறையைக் காட்டிலும், மையச்செயலியிடம் குறைந்த நேரமே வேலை வாங்கப்படும்.

card verifier : அட்டை சோதிப்பி; அட்டை சரிபார்ப்பி.

carriage automatic : தானியங்கி நகர்த்தி.

carriage motor : நகர்த்தி விசைப்பொறி.

carriage register : நகர்த்திப் பதிவகம்.

carriage return, automatic : தானியங்கு நகர்த்தி திரும்புகை.

Carrier Sense Multiple Access (CSMA) : சுமப்பி உணர் பன்முக அணுகல்.

carrier system : ஒலியேந்தித் தகவல் தொடர்பு முறை; சுமப்பி முறைமை : பல்வேறு அலைவரிசைகளை, செய்திகளைச் சுமந்து செல்லும் ஊடகமாகப் பயன்படுத்தி, ஒரே பாதையில் பல்வேறு தடங்களில் பல்வேறு செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பிவைக்கின்ற தகவல் தொடர்பு முறை. ஒவ்வொரு செய்தி அலையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள மின்காந்த அலையின் மேல் பண்பேற்றம் (modulation) செய்து ஒரே அலைக்கற்றையாக மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, அதே அதிர்வெண் அடிப்படையில் பண்பிறக்கம் (demodulation) செய்யப்பட்டு மூலத்தகவல் பெறப்படும்.

carry bit : மீந்திடும் துண்மி : இரும எண்களின் கூட்டல் 0+0-1, 0+1=1, 1+0=1; 1+1= 10 என்று அமையும். இத்தகைய இரும எண் கூட்டலைச் செய்யும் மின்சுற்றுகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மின்சுற்றும் இரண்டு உள்ளீடுகளை ஏற்கும். 0 அல்லது 1 என்பதை விடையாகத் தரும். இரண்டு உள்ளீடுகளும் 1 ஆக இருப்பின் வெளியீடு 0 ஆக இருக்கும். மீதமுள்ள 1, அடுத்த மின்சுற்றின் உள்ளீடாக அமையும். இவ்வாறு இரும எண் கூட்டலில் இரண்டு 1-களைக் கூட்டும்போது பெறப்படும் 1,0-வில், 0 விடை