பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cartesian coordinates

79

cascading style sheets



யாகவும், 1 மீந்திடும் துண்மியாகவும் அமைகிறது.

  1 1 
  1 0 1 0 
  0 1 1 1
——————————
1 0 0 0 1
——————————

மேற்கண்ட கூட்டலில் மூன்று முறை 1 மீதமாகிறது. முதல் இருமுறை அடுத்த கூட்டலுடன் சேர்க்கப்படுகிறது. கடைசியாக மீந்திடும் 1 விடையின் இடப்புற பிட்டாக அமர்ந்து கொள்கிறது.

cartesian coordinates : கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப் புள்ளிகள் : ஒரு

கார்ட்டீசியன் ஆயத் தொலைவுப் புள்ளிகள்

தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி. இவற்றில் கிடை மட்ட அச்சு x எனவும், செங்குத்து அச்சு y எனவும் இவை இரண்டுக்கும் 90 டிகிரி உயரவாக்கில் அமையும் அச்சு z என்றும் அழைக்கப்படுகின்றன. வீட்டில் அறையின் ஒரு மூலையில் இது போன்ற மூன்று அச்சுகளின் அமைப்பைக் காண்லாம். தரையில் உள்ள ஒரு புள்ளியை x,y ஆகிய இரு அச்சுகளின் ஆயத் தொலைவு அடிப்படையில் குறிப்பிடலாம். தரைக்கு மேல் மேல்தளம் வரையுள்ள எந்தவொரு புள்ளியையும் மூன்று அச்சுகளின் ஆயத்தொலைவுகளாகக் குறிப்பிட வேண்டும். 17ஆம் நூற்றாண்டில் இந்த வரைவியல் கணிதமுறையை ஃபிரெஞ்சுக் கணித மேதை டகார்ட்டீஸ் (Descartes) அறிமுகப்படுத்தினார்.

cartoon sounds : கார்ட்டூன் ஒலிகள்; கேலிப்பட ஒலிகள்.

cartridge drive பொதியுறை இயக்ககம்; நாடா பேழை இயக்ககம்.

cascading style sheets : அடுக்கி வைத்த அழகுத் தாள்கள் : ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் இணைய ஆவணங்களில் சிறப்புத் தன்மைவாய்ந்த, அழகாக அடுக்கிவைக்கப்பட்ட பக்கங்கள். ஹெச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்குபவர்கள் இது போன்று வடிவமைக்கப்பட்ட பக்கங்களை இணைத்துக் கொள்வதற்கான வரை முறைகளை வைய விரிவலைக் கூட்டமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்டிஎம்எல் 3.2-ன் தர நிர்ணயத்தில் இவை அடங்கியுள்ளன. ஒரு வலைப்பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும்விதம், அதன் எழுத்துரு, உருவளவு, வண்ணம் போன்றவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.