பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

,cc

82

cdev


அவர்களுக்கும் அஞ்சல் சென்று சேரும். CC-யில் தரப்பட்ட முகவரிதாரர்கள் அனைவரும் இந்த மடல் வேறு எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வகை யில் bc என்று குறிப்பிட்டு இன்னும் சிலருக்கு அதே மடலை அனுப்பி வைக்கும் முறையிலிருந்து மாறுபடுகிறது. bcc-யில் குறிப்பிடப்படும் முகவரிதாரர்களுக்கும் மடல் கிடைக்கும். ஆனால், இந்த மடல் எவருக்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய முடியாது.

(bcc-blind carbon copy). .cc : .சிசி : இணையத்தில் தள முகவரி காகஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பிரிவு.

CCITT groups 1-4 : சிசிஐடீடீ 1-4 விதிகள் : பன்னாட்டு தந்தி - தொலை பேசி ஆலோசனைக் குழு (International Telegraph and Telephone Consultative Committee) தொலை நகல் எந்திரங்களின் மூலமாக பட உருவங்களை குறியீடுகளாக்கவும் மறுமுனைக்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரை செய்த நான்கு பிரிவிலான நெறிமுறைகள். முதலிரண்டு பிரிவுகள் தொடர்முறை (analog) சாதனங்களுக்கும் 3,4-வது பிரிவு நெறிமுறைகள் இலக்கமுறை (digital) சாதனங்களுக்கும் ஆனவை.

ccNUMA : சிசிநூமா நினைவக அணுகலில் ஒரு வழிமுறை.Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiprocessing System) பலவற்றை, அதிவேக/அகல அலைக்கற்றையுடைய வன்பொருள் ஊடகம் மூலம் ஒருங்கிணைத்து ஒரே கணினி அமைப்பாகச் செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பம்.

cd : சிடி (CD) : கோப்பகம் மாறு என்று பொருள்படும் change directory என்ற தொடரைக் குறிக்கும் கட்டளைச் சொல். எம்எஸ்டாஸ், யூனிக்ஸ் மற்றும் எஃப்டீபீ கிளையன் நிரல்களில் இக்கட்டளை பயன் படுத்தப்படுகிறது. இக்கட்டளைச் சொல்லையடுத்துத் தரப்படுகின்ற பாதையுடன்கூடிய இன்னொரு கோப்பகத்துக்கு மாறிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, C:\VB> CD\VC\AProject என்ற கட்டளை மூலம் VB என்னும் கோப்பகத்திலிருந்து, VC என்னும் கோப்பகத்திலுள்ள Project என்னும் உள்கோப்பகத்துக்கு மாறிக் கொள்ளமுடியும். பிறகு அங்கிருக்கும் கோப்புகளையும் பயன்பாடுகளையும் எளிதாகக் கையாள முடியும்.

CD : சிடி : 1. மின்சாரம் அறியப்பட்டது என்று பொருள்படும் Current Detected என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணக்கியிலிருந்து, இணைக்கப்பட்ட ஒரு கணினிக்கு அனுப்பப்படும் சமிக்கை. இணக்கி, தகவலை ஏற்கத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துவது. காண்க DCD. 2. குறு வட்டு என்று பொருள்படும் Compact Disc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

cdew : சிடெவ் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS