பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CDV

85

centronics parallel interface


வாக்கப்பட்ட குறுவட்டுத் தகவல் பதிவு முறை. ஃபிலிப்ஸ், சோனி, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. சிடி-ரோம்/எக்ஸ்ஏ, ஐஎஸ்ஓ 9660 தரநிர்ணயத்திற்கு ஒத்தியல்பானது.

CDV : சிடிவி : 1. இறுக்கப்பட்ட இலக்கமுறை ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compressed Digital Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஊடகங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏற்ப இறுக்கிச் சுருக்கப்பட்ட ஒளிக்காட்சி உருவப்படங்கள். 2. குறுவட்டு ஒளிக்காட்சி என்றுபொருள்படும் Compact Disc Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 5 அங்குல விட்ட முள்ள வட்டினைக் குறிக்கிறது.

cell definition : சிற்றம் வரைவிலக்கணம்; கல வரையறை.

cell pointer : சிற்றம் சுட்டு, கலச்சுட்டு.

cellular automata : செல்பேசி தானியங்கு கொள்கை,

Cellular Digital Packet Data : செல்பேசி இலக்கமுறைப் பொதி விவரம் : ஏற்கெனவேயுள்ள செல்பேசித் தடங்களின் வழியே வினாடிக்கு 19.2 கிலோபிட் வேகத்தில் இருதிசை விவரப் பொதி தகவல் பரிமாற்றத்திற்கான தர நிர்ணயம்.

censorship : தணிக்கைமுறை : ஒரு தகவல் தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக்கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தகவல் பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இணையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டாக, இணையத்தில் செய்திக் குழுக்களில் alt என்னும் பிரிவில் முழுவதுமோ, alt.sex அல்லது alt.music.write-power ஆகிய பிரிவுகளில் வெளியிடப்படும் ஆபாசமான ஆட்சேபத்துக்குரிய செய்திகள் செய்திக்குழுவின் இடையீட்டாளரால் (moderator) தணிக்கை செய்யப்படுகின்றன. சில நாடுகளில் அந்நாடு பின்பற்றும் தேசியக் கொள்கை அடிப்படையில் சில அரசியல் மற்றும் கலை, பண்பாட்டு வலைத் தளங்களை அந்நாட்டுப் பயனாளர்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை.

center vertically : செங்குத்து மையப்படுத்து.

central control unit : மையக் கட்டுப்பாட்டகம் .

central office : மைய அலுவலகம்  : தகவல் தொடர்பு அமைப்பில் வாடிக்கையாளர்களின் தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படும் இணைப்பு மையம்.

central processor : மையச் செயலி . மையச் செய்முறைப்படுத்தி, மையச் செயலாக்கி.

centronics parallel interface : சென்ட்ரானிக்ஸ் இணைவழி இடை முகம் : கணினிக்கும் அதன் புறச்சாதனங்களுக்கும் இடையேயான இணைவழி தகவல் பரிமாற்றப் பாதைகளுக்கான தர நிர்ணயம். அச்சுப்பொறிகளை உற்பத்தி செய்யும் சென்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தத் தர நிர்ணயத்தை முதலில் உருவாக்கியது. சென்ட்ரானிக்ஸின் இணைவழி இடைமுகம்,எட்டு