பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CERN

86

CGI


இணைவழி தகவல் தடங்களையும் கட்டுப்பாடு மற்றும் நிலையறி தகவலுக்கான கூடுதல் தடங்களையும் வழங்குகிறது.

CERN : செர்ன் : அணு இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆய்வுக் கூடம் என்று பொருள்படும் Conseil Europeen Pour La Recherche Nucleaire (The European Laboratory for Particle Physics) என்ற பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் செர்ன் ஆய்வுக் கூடம் அமைந்துள்ளது. 1989ஆம் ஆண்டில் இந்த ஆய்வுக் கூடத்தில்தான் டிம் பெர்னர்ஸ்-லீ வையவிரிவலையை (World Wide Web) உருவாக்கினார். அறிவியல் ஆய்வு அறிஞர்களுக்கிடையே தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாய் இருந்தது.

CERN server : செர்ன் வழங்கன் கணினி : செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபி (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன.

CERT : செர்ட் : கணினி அவசர நடவடிக்கைக் குழு என்று பொருள்படும் Computer Emergency Response Team என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையப் பயனாளர்களுக்கு 24 மணிநேரமும் கணினிப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் இது. புதிய நச்சுநிரல் (Virus) மற்றும் வேறெந்த கணினிப் பாதுகாப்பு அபாயம் குறித்தும் ஆலோசனைகள் பெறலாம்.

.cf : சிஏஃப் : மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசில் செயல்படும் இணைய தள முகவரிகளில் குறிப்பிடப்படும் பெரும் புவிக்களப் பெயர்.

.cg : சிஜி : இணையத் தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர்.

CGA : சிஜிஏ : வண்ண வரைகலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறி முகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப்பலகை, சிஜிஏ, பல்வேறு எழுத்து மற்றும் வரைகலைக் காட்சி முறைகளைத் தரவல்லது. எழுத்து முறைகளில் 16 நிறங்களில் 25 வரிகள், 80 எழுத்துகள், 25 வரிகள்/40 எழுத்துகள் காண்பிக்கும் முறைகளும் உண்டு. 2 நிறங்களில் 640 கிடைமட்ட படப்புள்ளிகளும் (pixels), 200 செங்குத்துப் படப்புள்ளிகளும் இடம்பெறும் வரைகலைக் காட்சி முறையும், 320x200 படப்புள்ளி, நான்கு நிறக் காட்சிமுறையும் உண்டு.

CGI : சிஜிஐ : பொது நுழைவாயில் இடைமுகம் எனப்பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஹெச்டீடீபீ போன்ற தகவல் பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும், தரவுத் தளம் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென் பொருள் தொடர்பான விவரப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரவன் கணினிகளுக்கிடையேயும் நடைபெறும் தகவல் தொடர்புக்