பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CG-bin

87

channel op


குரிய செந்தரக் கட்டுப்பாடுகளை இது குறிக்கிறது.

CGl-bin : சிஜிஐ-பின் : Common Gateway Interface-binaries stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஹெச்டீடீபி வழங்கன் கணினிகளில் சிTஐ நிரல்களின் மூலம் இயக்கப்படும் புறநிலைப் பயன்பாடுகள் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் கோப்பகம் (directory),

CGI script : சிஜிஐ உரைநிரல்

.ch : சிஹெச் : இணைய தளங்களில் சுவிட்சர்லாந்து நாட்டுத் தள முக வரியில் குறிப்பிடப்படும் பெரும் புவிப்பிரிவு களப் பெயர்.

chain printer : சங்கிலி அச்சுப்பொறி,

chain printing : சங்கிலி அச்சுப்பதிவு.

Challenge Handshake Authentication Protocol : சேப் ; (CHAP) : பீபீபீ (ppp - point to point protocol) நெறிமுறை வழங்கன் : கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன் படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை.

change : மாற்று.

change all : அனைத்தும் மாற்று.

change of control : கட்டுபாட்டு மாற்றுகை.

channel access : தட அணுகல் : 1. பிணைய அமைப்புகளில் இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகளை இணைக்கும் தகவல் பரிமாற்றத் தடத்தை அணுகி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முறை. உள்ளடக்க அனுப்புகை (contention polling) மற்றும் வில்லை வளையம் (token ting) ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் தட அணுகல் முறைகளாகும். 2. கம்பியில்லாத் தொடர்பு முறையில் பயன்படுத்தப்படும் சிடிஎம்ஏ (CDMA) போன்ற தொழில்நுட்பத்தை இது குறிக்கிறது.

channel capacity : தட கொள்ளளவு/கொள்திறன், தட வேகம்; தட இணைப்புத் திறன் : ஒரு தகவல் பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப்படுகிறது.

channel, communication : தகவல் தொடர்புத் தடம்.

channel emitter : தட ஒளிர்வு; தட உமிழி.

channel guide : தட வழித்துணை.

channel hop : தடத்தாவல் : இணையத்தில் தொடர் அரட்டையில் (IRC) ஈடுபட்டுள்ளவர் ஒர் அரட்டைத் தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது.

channel, information : தகவல் தடம்

channel, input/output : உள்ளீட்டு வெளியீட்டுத் தடம்.

channel op : தட நிர்வாகி,தட மேலாளர்;தட இயக்குனர் : channel opearator என்பதன் குறுக்கம். இணையத் தொடர் அரட்டையில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டை உரையாடல்களை ஒருவர் மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். விரும்பத் தகாத அநாகரிகமான உரையாடலில் ஈடுபடுவோரை அரட்டைத் தடத்திலிருந்து நீக்கிவிட இவருக்கு அதிகாரம் உண்டு.