பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

channel, peripheral

88

character recognition


channel, peripheral interface : புறச்சாதன இடைமுகத் தடம்.

channel, read/write : படி/எழுது தடம்.

channels : தடங்கள், வழிகள்.

character definition table : எழுத்து வரையறை அட்டவணை : கணினித் திரையில் புள்ளிகளால் ஆன எழுத்துகளையும், துண்மிவரைவு எழுத்து வடிவங்களையும் காண்பிக்க அடிப்படையாக விளங்கும் தோரணிகள் (patterns) அடங்கிய அட்டவணை. கணினிகள் நினைவகத்தில் இந்த அட்டவணையை இருத்தி வைத்துச் செயல்படும்.

character, binary code : இருமக் குறிமுறை எழுத்து.

character density : எழுத்து நெருக்கம்; எழுத்து அடர்வு : அச்சடிப்பில் அல்லது திரைக்காட்சியில், ஓர் அலகு பரப்பளவில் அல்லது குறிப்பிட்ட நீள அளவுக்குள் இடம்பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் அளவீடு.

character emitter : எழுத்து ஒளிர்வு; வரிவடிவ உமிழி.

character image : எழுத்துப் படிமம்; எழுத்து உருக்காட்சி : ஒர் எழுத்தின் வடிவில் ஒழுங்கமைக்கப்படும் துண்மிகளின் (பிட்) தொகுப்பு. ஒவ்வொரு எழுத்தின் உருவமும் செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டங்களுக்குள் அடங்கியுள்ளது. ஓரெழுத்தின் உயரமும் அகலமும் அதன் மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன.

characater layout : எழுத்து உருவரை.

character based programme : எழுத்து சார் நிரல்.

character mode : எழுத்துப் பாங்கு.

character, least significant : குறை மதிப்பெழுத்து.

character mode terminal : எழுத்துப் பாங்கு முனையம்.

character modifier : எழுத்து மாற்றமைப்பி.

character, numeric : எண்வகை எழுத்து.

character oriented : எழுத்து அடிப்படையிலான.

character printer : எழுத்தச்சுப்பொறி : 1.ஒரு நேரத்தில் ஓர் எழுத்தை அச்சடிக்கும் அச்சுப்பொறி, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் புள்ளியணி அச்சுப்பொறியும், டெய்ஸி-சக்கர அச்சுப்பொறியும் எடுத்துக்காட்டுகள். வரி அச்சுப்பொறி, பக்க அச்சுப்பொறி ஆகியவற்றோடு ஒப்பிட்டு அறிக. 2. வரைகலைப் படங்களை அச்சிடவியலாத புள்ளியணி அச்சுப்பொறிகளையும், டெய்ஸி சக்கர அச்சுப்பொறிகளையும், லேசர் அச்சுப்பொறிகளையும்கூட இச்சொல் குறிக்கிறது. இத்தகைய அச்சுப்பொறி கணினியிலிருந்து எழுத்து வடிவிலான விவரங்களைப் பெற்று அப்படியே எழுத்துவடிவில் அச்சிடும். வரைகலை அச்சுப் பொறியோடு ஒப்பிட்டு அறிக.

character reader magnetic ink : காந்த மை எழுத்துப் படிப்பி.

character recognition : எழுத்துணர்தல்; எழுத்தறிதல் : கணினியில் ஓர் எழுத்தை வெவ்வேறு எழுத்துருக்களில் (fonts) வெவ்வேறு பாணிகளில் (styles) (a : த : ஒ) பயன்படுத்துகிறோம். ஒரு தாளில் அச்சிடப்பட்ட எழுத்தை வருடுபொறி மூலம் வருடி கணினிக்குள் செலுத்தும்போது, கணினி அந்த எழுத்தை அடையாளம் கண்டு