பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cipher system

91

classless interdomain routing


ஏற்பட்டு செயல்படாத நிலையேற்படும்போது தொடர்ந்து மணியொலிக்கும்.

cipher system : மறையெழுத்து முறை

cipher text : மறையெழுத்து உரை

circuit, AND : உம்மை மின்சுற்று.

circuit, leastable : ஈருறுதி மின்சுற்று

circuit board : மின்சுற்றுப் பலகை

circuit capacity : மின்சுற்று கொள்திறன் திறன்.

circuit card : மின்சுற்று அட்டை.

circuit, control : கட்டுப்பாட்டு மின்சுற்று.

circuit diagram : மின்சுற்று வரிப் படம்.

circuit, NOR : இல் அல்லது மின்சுற்று.

circuit switching : மின்சுற்று இணைப்பாக்கம்.

circulating register : சுழற்சிப் பதிவகம்.

circuit data services : மின்சுற்று தகவல் சேவைகள் மின்சுற்று தொடர்பிணைப்புத் தொழில்நுட்ப அடிப்படையில், மடிக்கணினி மற்றும் செல்பேசி வாயிலாக அதிவேக தகவல் பரிமாற்றத்தை வழங்குதல்.

circuit, virtual : மெய்நிகர் மின்சுற்று.

check, parity : சமன் சரிபார்ப்பு.

check, validity : செல்லுபடிச் சரிபார்ப்பு.

checked objects : தேர்வு செய்த பண்பு.

checked property : சரிபார்ப்புப்பொருள்.

chicken-and-egg-loop : கோழியா முட்டையா மடக்கு.

.ck : சிகே : இணைய தள முகவரியில், குக் தீவின் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

.cl : .சி.எல் : (.cl) : இணைய தள முகவரியில், சிலிநாட்டுத் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிபிரிவுக் களப்பெயர்.

clari newsgroups : கிளாரி செய்திக்குழுக்கள் : இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய செய்திக்குழு. கிளாரிநெட் செய்திக் குழுவை தகவல் தொடர்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் (Reutuers), யுனைட்டட் பிரஸ் இன்டர்நேஷனல் ஒயர் சர்வீசஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கர், காமர்ஸ் பிசினஸ் டெய்லி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக் கட்டுரைகளை இதில் காணலாம். மற்ற செய்திக் குழுக்களைப் போலன்றி, கிளாரிநெட் செய்திக் குழுவில் உறுப்பினராகக் கட்டணம் உண்டு. இச்சேவையைக் கட்டணம் செலுத்தி வாங்கியுள்ள இணையச் சேவை நிலையங்கள் மூலமாகவே இச்செய்திக் குழுவை அணுக முடியும்.

class and objects : இனக்குழுவும் இனப் பொருட்களும்

class hierarchy : இனக்குழுப் படி நிலை; வகுப்பு தொடர்முறை.

classless interdomain routing : பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல் : இணையத்தில் உயர் நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்புமுறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தகவல்களின் அளவைக் குறைக்கும்