பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

class methods

92

clear/delete/remove


பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத்திட்டமுறை செயல்பட இதனை ஏற்றுக்கொள்ளும் திசைவித்தல் நெறி முறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழைவாயில் நெறிமுறை (Border Gateway Protocol-BGP)யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPv2) இவற்றுள் சில. இத்திட்ட முறையின் தலைப்பெழுத்துக் குறும் பெயர் CIDR ஆகும்.

class methods  : வகுப்பு வழி முறைகள், இனக்குழு வழிமுறைகள்.

class module : வகுப்புக் கூறு; இனக்குழு கூறு

Class A Network : ஏ.-பிரிவு பிணையம் : 16,777,215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ.-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக் கொள்கிறது. முதல் துண்மியை (பிட்) சுழியாக (0) மாற்றி விடும். புரவன் கணினி கடைசி மூன்று வண்மிகளால் குறிக்கப்படும். ஏ-பிரிவு முகவரியிடல் தற்போது 128 பிணையங்கள்வரை ஏற்றுக் கொள்கிறது. மிகச்சில பிணையங்களையும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான புரவன் கணினிகளையும் கொண்ட மிகப்பெரிய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு ஏ-பிரிவு முகவரிமுறை ஏற்றது.

classic style : மரபுப் பாணி.

classify : வகைப்படுத்து.

class path : வகுப்புப் பாதை இனக் குழுப் பாதை : ஜாவா மொழியில் நூலக இனக் குழுக்களைச் சேமித்து வைத்துள்ள கோப்பகத்தைக் குறிக்கும்.

clean boot : தூய இயக்கம் : இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக் கையிலான கோப்புகளின் துணை கொண்டு கணினியை இயக்கிவைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்திய ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் காரண மாகத்தான் சிக்கல் ஏற்பட்டது என்பதைப் பிரித்தறிய முடியும்.

cleaning disk : தூய்மை வட்டு.

clear down : துடைத்தெறி.

clear method : துடைப்பு வழிமுறை.

clear outline : சுற்றுக்கோடு நீக்கு.

clear print area : அச்சு பரப்பெல்லை நீக்கு.

clear request packet : துடைத்தெறி வேண்டுகோள் பொதி,

clean install : தூய நிறுவுகை : கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாறு மறு நிறுவுகை செய்வது பயன்தராது. முன்னால் நிறுவியபோது இருந்த பயன்பாட்டு அல்லது முறைமைக் கோப்புகள் எதுவும் இல்லாத வகையில் மறுநிறுவுகை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளினால் ஏற்பட்ட சிக்கல் தீர வாய்ப்புண்டு.

clear/delete/remove : அழி/நீக்கு/அகற்று.