பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clipboard object

94

close box


பயனாளர் பேனாவைத் தொட்டுச் செயல்படுத்துவர். பிடிப்புப் பலகையில் பதிவான தகவல் கம்பி வடம் அல்லது இணக்கியின் வழியாக வேறு கணினிக்கு மாற்றப்படுகிறது. மரபுமுறைப் பிடிப்புப் பலகையைப் பயன்படுத்துவது போலவே, களப்பணி, தகவல் சேகரிப்பு, கூட்டம் போன்றவற்றில் பிடிப்புப் பலகைக் கணினியும் பயன்படுத்தப்படும்.

clipboard object : இடைநிலை பலகைப் பொருள்கள்,

clipboard view : இடைநிலை பலகைத் தோற்றம்.

clipper chip : கிளிப்பர் சிப்பு: துள்ளல் வகை இணைப்பு நெறிமுறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல் படுத்துகிற ஒருங்கிணைந்த மின் சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தகவல் தொகுதிகளையும், 80 துண்மிகளுக்கான திறவிகளையும் கொண்டது. தொலைபேசித் தகவல்களை இரகசியக் குறியீடுகளாக வைக்க அமெரிக்க அரசு இதனை உருவாக்கியது. மறைக்குறியீடுகள் என்ன குறிப்பிடுகின்றன என்பதை அமெரிக்க அரசு அறிய முடியும். அந்த மின்சுற்றைத் தன் நாட்டில் கட்டாயமாக்க முயன்ற அமெரிக்க அரசின் எண்ணம் நிறைவேறவில்லை.

clipping path : கிளிப்பிங் வழி: ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும்.

clock/calendar : கடிகாரம்/நாட்காட்டி: சரியான நேரம் மற்றும் தேதி காட்டுவதற்கு நுண் கணினியினுள் நேரக் கணக்கு கொண்ட தனியான சுற்று பயன்படுத்தப்படுகிறது. மின்கலம் அளிக்கும் மின்சாரத்தின் மூலம் அது இயங்குகிறது. கணினியை நிறுத்திவிட்டாலும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இயக்க முறைமை நேரம்/தேதியைப் பயன்படுத்த இயலும். சான்றாக, கோப்புகளை உருவாக்கிய தேதியைப் பதிக்கலாம். கோப்பினைப் படித்த நேரம், திருத்தம் செய்த நேரம் எல்லாம் குறிக்கலாம். எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் அதைப் பயன்படுத்த இயலும். சான்றாக, ஓர் ஆவணத்தில் அன்றைய தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க உதவும்.

clock, digital : இலக்கமுறை கடிகாரம்.

clock doubling : இரட்டிக்கும் கடிகாரம்: இரட்டிக்கும் மின்துடிப்பு : சில இன்டெல் நுண்செயலிகள் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை. அதன்மூலம் தகவல்களையும், ஆணைகளையும் அமைப்பு முறையின் மீதப் பகுதியைவிட இரட்டை அளவு வேகத்தில் சிப்பு செயல் முறைப்படுத்த இயலும்.

clocking : நேரம் அளவிடல்.

clock pulse : கடிகாரத் துடிப்பு: மின் துடிப்பு அதிர்வு : இலக்கமுறை சாதனத்தின் செயல்பாடுகளோடு ஒத்தியங்கச்செய்வதற்காக படிக ஊசலினால் ஒரு கால ஒழுங்கில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுத் துடிப்பு.

clock signal generator : கடிகார சமிக்கை இயற்றி.

clock timer : நேரங்காட்டி; காலங்காட்டி கடிகாரம்.

close box : மூடு பெட்டி : மெக்கின் டோஷ் வரைகலை முறை பயன்படு