பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

codec

97

collaborative filtering


codec : கோடெக் : coder, decoder என்ற இருசொற்களின் கூட்டுச் சொல்.

coded decimal number : குறிமுறைப் பதின்ம எண்.

coded decimal representation, binary: இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு.

coded digit, binary : இருமக் குறிமுறை இலக்கம்.

coded octal binary : இருமக் குறிமுறை எண்மம்.

coder : குறிமுறையாக்கி,

codingsheet : குறிமுறையாக்கத் தாள்.

code system : குறியீட்டு முறைமை

coding basics : குறிமுறை அடிப்படைகள்.

coding, absolute : முற்றுக்குறி முறையாக்கம்.

coding, automatic : தானியங்கு குறிமுறையாக்கம்.

coding, direct : நேரடி குறிமுறையாக்கம்.

co-efficient : குணகம்

cold link : குளிர் தொடுப்பு: புதுத்தெடுப்பு : தகவல் வேண்டுமென்று கேட்டதன் மேல் உண்டாக்கப்படும் இணைப்பு. அந்த வேண்டுகோள் நிறைவேறியவுடன் இணைப்பு துண்டிக்கப் பெறும். அடுத்தமுறை கிளையன். வழங்கனிடம் மீண்டும் தகவல் வேண்டுமெனக் கேட்டால் மீண்டும் இணைப்பு நிறுவப்பட வேண்டும். பரிமாற நிறைய தகவல்கள் கொண்டிருந்தால், கிளையன்/ வழங்கன் கட்டமைப்பில் குளிர் இணைப்புகள் பயனுள்ளவை. மைக்ரோசாப்ட் எக்செல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கு நிலை தகவல் பரிமாற்றம் குளிர் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.

cold restat : புது மறுதொடக்கம்.

code snippet : குறியீட்டுச் சிறுபகுதி : 1. வரைகலைப் பயன்பாட்டில் இடைமுகம் ஒன்றில் பயனாளர், பட்டியில் விருப்பத்தேர்வு செய்யும் போது அல்லது பொத்தானை அழுத்தும்போது என்ன நிகழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சிறிய நிரல் பகுதி. 2. பெரிய செயல் முறைத் திட்டத்தின் பகுதியாக உள்ள செயல்முறை நிரலில் சிறு துண்டு. அச்சிறுபகுதி குறிப்பிட்ட வேலை அல்லது பணியை நிறைவேற்றும்.

collaborative filtering : இணைந்து வடிகட்டல், உடனுழை வடிகட்டல் : பலருடைய பட்டறிவுகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தகவல் பெறும் ஒருவழி. ஜெராக்ஸ் பார்க்கில் டெலிக் டெர்ரி என்பவரால் இந்தக் கலைச்சொல் உண்டாக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துக்கொண்டு வரும்போதே, பயன்படுத்துபவர்கள் அவ்வப்போது விளக்கஉரை குறித்துக் கொண்டுவரும் நுட்பத்தை முதலில் அவர்தான் பயன்படுத்தினார். தவிரவும், உள்ளடக்கம் பொறுத்து மட்டுமின்றி மற்றவர்கள் என்ன எழுயிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அடுத்து எந்த ஆவணங்களைப் படிக்கலாம் என்பதைத் தெரிவு செய்யமுடியும். இணைந்து வடிகட்டுதலின் சாதாரண பயன்பாடு என்னவென்றால் குறிப்பிட்ட மக்களுக்கு விருப்பமான உலகளாவிய வலைத்தளங்களின் பட்டியலை உண்டாக்குவதாகும். பலருடைய அனுபவங்களை எழுத்தில் கொணர்ந்து சுவையான வலைத்