பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flag

100

flo

களால் மாற்ற இயலாத தகவல்களுக்குரிய சேமிப்பு. எ-டு காந்த வகைச் சேமிப்பு.

flags - கொடிகள் : நன்கு அமைந்த வடிவம் உண்டு. இவை குறிகாட்டிகளே. எ-டு சி மொழியில் ± வெளிப்பலன்களைப் பெற இவை பயன்படுபவை. குறிப்பாக இட நிரவலுக்கும், நிறைகுறை காட்டல்களுக்கும் பயன்படுபவை.

flag, kinds of - கொடி வகைகள் : 1. மென்பொருள்கொடி: ஒரு தனி நிலைமையின் நிகழ்நிரல் வட்டப் பகுதியினைத் தெரிவிக்கப் பயன்படுவது. 2. வன்பொருள்கொடி: இது குறிப்பிடப்பட்ட நேரங்களில் சிறப்பு நிகழ்வுகள் தோன்றுமாறு செய்வது. பொதுவாகக் கொடிகள் சில நிலைமைகளைச் சரிபார்க்கப் பயன்படுபவை.

flash ROM- A type of read only memory. Here the contents of memory chip can be erased and rewritten thro software changes. It is very easy to update. வீசுரோம் : படிப்பதற்கு மட்டுமுள்ள ஒரு வகை நினைவகம். இங்கு நினைவக நறுவலின் உள்ளடக்கங்கள், பொருள் மாற்றங்கள் மூலம் அழிக்கப்படலாம்; மீண்டும் எழுதப்படலாம். இதை மேம்படுத்துவது எளிது.

flat-file data base - தட்டைக்கோப்புத் தகவல்தளம் : இது ஒரு தனித்தகவல் தளம் உள்ள தகவல் தளக்கோப்பு. இது ஒரு தனிப்பயனாளிக்கோ பயனாளிகளுக்கோ பயன்படுவது. எளிமையும் வரம்பும் கொண்டது.

flip-flop - A bistable circuit eg. a circuit capable of storing a bit of information and of assuming two stable states (0 and 1) as long as power is supplied. Flip-flops may be grouped together to form registers. எழுவிழுசுற்று : இருநிலைச் சுற்று. எ-டு மின்னாற்றல் இருக்கும் வரை இருமத் தகவலைச் சேமித்து, அதை இரு நிலைகளில் (0,1) வைக்கும் சுற்று. எழுவிழு சுற்றுகள் சேர்ந்து. பதிவகங்களைத் தோற்றுவிப்பவை.

floating lines - மிதவை வரிகள் : கணிப்பொறியில் இரு போடு நிலைகள் ஒன்றில் இருக்கும் குறிகைகள். எ-டு உயர் மின்னழுத்தம் = +5V, குறை மின்ன ழுத்தம் = +1V.

floating point number - மிதவைப்புள்ளி எண் : மிதவைப்புள்ளி குறியிடலால் தெரிவிக் கப்படும் எண்.

floating point representation - மிதவைப்புள்ளி குறியிடல் : இது ஒரு குறிமான முறை. இதில் தசமப் புள்ளி பொருத்தப்படுவதில்லை. கணிப்பொறி