பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flop

101

flow


யில் இந்த எண்களைக் குறிப்பிடும் பொழுது, குறி இரு பகுதிகளைக் கொண்டிருக்கும். எண்ணின் பின்னப் பகுதியை ஒரு பகுதி கொண்டிருக்கும். அடுத்த பகுதி எண்ணின் அடி அடுக்கைக் குறிக்கும். எ-டு. திட்டக்குறிமானம் 0.0000256, அறிவியல் குறிமானம் 0.256x104, மிதவைப் புள்ளி குறியீடு. 0.256 E-04.

floppy disk - நெகிழ்வட்டு: பிளாஸ்டிக் பொருளாலானது. காந்தப்படலப் பூச்சு பூசப் பட்டிருக்கும். இலக்க வடிவில் கணிப்பொறித் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். விலை மலிவு. ஆனால் நம்புமை குறைவு. தட்டையான வட்ட மான ஊடகம். திறன் வேறுபடுவது - 1KB, 1MB.

floppy disk controller - This is either a hardware or software used to control the orderly transfer of data between a computer and a floppy disk drive. நெகிழ்வட்டுக் கட்டுப்படுத்தி : இது ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள். கணிப்பொறிக்கும் நெகிழ்வட்டு இயக்கிக்கும் இடையே ஒழுங்காகத் தகவல் மாறுவதைக் கட்டுப்படுத்துவது.

floppy disk drive, FDD - A device used to handle one or more floppy disks. நெகிழ்விட்டு இயக்கி, நெவஇ : ஒன்றிற்கு மேற்பட்ட நெகிழ் வட்டுகளைக் கையாளப் பயன்படுங் கருவியமைப்பு. அதாவது, இதில் தகவலைப் பதிவு செய்யும் ஊடகம் நெகிழ்வட்டு.

flow - 1) Sequence of data. 2) Succession of events. ஒட்டம் : 1. தகவல் வரிசை 2. நிகழ்வுத் தொடர்வு.

flowchart - A diagram using symbols connected by arrows to show the sequence of actions necessary to solve a particular problem. வழிமுறைப் படம் : அம்புக் குறிகளால் இணைக்கப்பட்ட குறியீடுகளைப் பயன்படுத்தும் படம். ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வுகாணத் தேவையான செயல் வரிசையைக் காட்டுவது.

flowchart, advantages of - வழிமுறைப்பட நன்மைகள் : 1. துல்லியமானது. 2. கருத்துகளை நுட்பமாகக் குறிப்பது. 3. புரிந்து கொள்வது எளிது. 4. சிக்கலைத் தீர்ப்பது.

flowchart symbols - வழிபடக் குறியீடுகள் : செயல்களைக் குறிக்கும் திட்டமான குறியீட்டுத் தொகுதி. பெட்டிகள் வரிசையையும், வயிரவடிவம் ஆய்வையும் முடிவுகளையும் ஏனைய வடிவங்கள் உட்பலன், வெளிப்பலன் இணைப்புப் புள்ளி ஆகியவற்றையும் குறிப்பவை. பா. பக்கம் 50.