பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

form

103

form


form - படிவம் : இது புலங்கள் அல்லது கட்டுப்பாடுகளின் திரட்டு. பள்ளி விண்ணப்பப் படிவம் போன்றது. பயனாளி தன் உட்பலனை அளிக்க உதவுவது. தகவலை அட்டவணையில் பதிவு செய்யவும் பார்க்கவும் பதிப்பிக்கவும் உதவுவது. இதில் பொத்தான்கள், பாடப் பெட்டிகள், செலுத்துசொல் கட்டளைகள் சரிபார்ப்புப் பெட்டிகள் முதலியவை அடங்கும்.

form designing - படிவமைப்பு உருவாக்கல் : தன் வலவன் தெரிவைப் பயன்படுத்தி இதை வடிவமைக்கலாம்.

form module, FM - படிவ அலகு, பஅ : இது ஒரு பயன்பாட்டின் பார்க்கக்கூடிய பகுதி. குறிப்புதவிகளைக் கொண்டது.

form window - This is used to design the different forms an application will contain. படிவச் சாளரம் : ஒரு விண்ணப்பத்திலுள்ள வேறுபட்ட படிவங்களை வடிவமைக்க இது பயன்படுவது.

formal language - An abstract mathematical object used to model the syntax of a programming language. முறைசார்மொழி : கருத்துப் பொருளான கணிதப்பொருள். நிகழ்நிரல் மொழியின் தொடரியலை வடிவமைக்கப் பயன்படுவது.

format - 1) The arrangement of data into a specified layout. 2) The designated placement of text and margins and other elements in hard copy. 3) The programme to set up text arrangements for outputting. படிவமைப்பு : 1. குறிப்பிட்ட திட்ட வரையில் தகவல்களை அமைத்தல். 2. வன்படியில் பாடம், விளிம்பு மற்றும் பிற கூறுகளை உரியவாறு அமைத்தல். 3. வெளிப்பலனிற்காகப் பாடத்தை நிறுவும் நிகழ்நிரல்.

format string - படிவமைப்புச் சரம் : கூற்றுகளின் படிவமைப்பைக் காட்டும் உருக்களைக் கொண்டது இது. ஒவ்வொரு உருவிற்கு முன் % குறி வரவேண்டும். ஒவ்வொரு எண் குறிக்கும் முன்பு உம்குறி & வர வேண்டும்.

formatting - 1) Setting up the order of the information. This is input to a computer. 2) Arranging the layout of the data. This is output from the computer. படிவம் அமைத்தல் : 1. தகவல் வரிசை அமைத்தல். இது கணிப்பொறிக்கு உட்பலன் 2. தகவல் திட்டவரை அமைத்தல். இது கணிப்பொறிக்குப் புறத்தே அமையும் வெளிப்பலன்.

formatting, alternate method of - படிவமைப்பு மாற்றுமுறை : ஒரு குறிப்பிட்ட பாணியில்