பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fun

106

fun


function - சார்பலன் : இது ஒரு செயல்வகை அல்லது ஒரு வகைத் துணை நடைமுறைச் செயல். இதற்குத் திட்டமான சுட்டளவுகள் உண்டு. மதிப்பு மூலம் சி மொழியில் இச்சுட்டளவுகளைச் செலுத்த இயலும் ஒரு சார்பலன் ஒரு மதிப்பை மட்டுமே திருப்பியனுப்ப இயலும் நிகழ்நிரலில் ஒவ்வொரு சார்பலனும் அறுதியிடப்பட வேண்டும். திரளில் சார்பலனை அடக்கலாம். பா. library functions.

functional requirements - சார்பலன் தேவைகள் : இவை ஆவணமாக்கலைக் குறிக்கும்; நிகழ்நிரலைத் தொடர்ந்து, தொகுதி என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகத் தெரிவிக்கும்.

function, body of - சார்பலன் அமைப்பு : இது மாறு அறுதியிடும் பகுதி, முறையாக்கு பகுதி, திருப்பு கூற்று என்னும் முப்பகுதிகளைக் கொண்டது.

function declaration - சார்பலன் அறுதியீடு : ஒரு சார்பலனை முறையாக்கவும் மிதவையைத் திருப்பவும் வேண்டுமானால், அது முதன்மைச் சார்பலனாலேயே அறுதியிடப் படவேண்டும். இதுவே சார்பலன் அறுதியீடு எனப்படும். ஓர் எளிய சார்பலன் அறுதியீட்டிற்குரிய பொதுப்படிவமைப்பு பின்வருமாறு : datatype - தகவல் வகை , function name -சார்பலன் பெயர்.

function, kinds of - சார்பலன் வகைகள் : 1) பயனாளிக்குரிய சார்பலன், 2) திரட்டுகள் பலன், 3) உட்பலன் சார்பலன், 4) வெளிப்பலன் சார்பலன்.

function, library, kinds of - திரட்டுசார்பலன் வகைகள் : சி மொழி சில கணிதச் சார்புகளை அனுமதிக்கிறது. இவையே திரட்டு சார்பலன்கள் எனப்படும். அவற்றில் சில பின்வருமாறு: கெட்ஸ், புட்ஸ், ரேண்டமைஸ், ஸ்டர் செட், அப்ஸ் முதலியவை.

function, naming - சார்பலனைப் பெயரிடல் : பயனாளிக்குரிய சார்பலனுக்குச் செல்லத்தக்க மாறிப்பெயரை அளிக்கலாம் முதன்மை நிகழ்நிரலையே சி மொழியில் ஒரு சார்பலனாகக் கருதலாம். சி மொழி நிறைவேற்றப்படும்பொழுது, நிறைவேற்றல். இம்முதன்மைச் சார்பலனிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே, ஒரே ஒரு முதன்மைச் சார்பலன் மட்டுமே இருக்க இயலும்.

functions frequently used - அடிக்கடிப் பயன்படும் சார்பலன்கள் : சைன், காஸ், டேன், லாக் முதலியவை.

functions, nesting - கூடுகைச் சார்பலன்கள் : நிறைவேற்றலுக்காக ஒரு சார்பலனுக்கு மற்றொரு சார்பலன் தேவைப்