பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fun

107

game


படும். இவ்வகைச் சார்பலன் வரையறையே கூடுகை சார் பலன் வரையறை எனப்படும். கொடுக்கப்பட்ட மதிப்பெண்களிலிருந்து மாணவர்களின் சராசரி மதிப்பெண்ணையும் தேறிய மாணவர்களின் விழுக்காட்டையும் இச்சார்பலன் மூலம் கண்டறியலாம்.

function, structure of - சார்பலன் அமைப்பு : சி மொழியில் சார்பலன்களுக்குத் திட்டமான அமைப்பு உண்டு. ஒரு சார்பலனின் பொது அமைப்பு பின்வருமாறு.

function name - சார்பலன் பெயர் (list of parameters - சுட்டளவுகளின் பட்டி)

Parameter - declaration சுட்டளவு அறுதியீடு

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

... ... ... ... ... ...

சார்பலன் பெயரை அடைப்புக்குறி தொடரும். இது காற் புள்ளியால் பிரிக்கப்பட்ட சுட்டளவுகள் பட்டியலைக் கொண்டிருக்கும். பின் இச்சுட்டளவுகள் அறுதியிடப்படும். அதற்குப் பின் சார்பலன் அமைப்பு கொடுக்கப்படும்.

function switch - A network having a number of inputs and outputs. - சார்பலன்சொடுக்கி : பல உட் பலன்களையும் வெளிப்பலன் களையுங் கொண்டுள்ள வலையமைவு.

function table - A computer device converting multiple inputs into a single output. சார்பலன் அட்டவணை : இது ஒரு கணிப்பொறியமைப்பு. மடங்கு உட்பலன்களை ஒரு தனி வெளிப்பலனாக மாற்றுவது.

fundamental control structures - அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்புகள் : இவை கணக்கிடுதலைச் செய்வதற் குரிய நுணுக்கங்கள். இவை திரும்பத் திரும்ப வருபவை. இவை பின்வருமாறு: 1. வரிசையாக்கல் 2. பிரித்தல் 3. தொடர்ந்து செல்லுதல். இவற்றை அவ்வப்பதிவுகளில் காண்க.

G

Galilieo - கலீலியோ (1564-1642): நழுவுகோல் என்பது ஒரு கணிப்பீட்டுக் கருவி. இதை இவர் புனைந்தார். மின்னணுக் கணிப்பான் வரும்வரை இது பயன்பட்டது.

game chip - விளையாட்டு நறுவல் : நுண்மின்னணுப் பகுதி. இது இல்லக் கணிப்பொறியில் பயன்படுவது. விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் முறைமைச் சார்பலன்களைக் கொண்டது.