பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

game

108

gen


games - விளையாட்டுகள் : கணிப்பொறிப் பயன்பாடுகள். கேளிக்கை அதிகம்; கல்வி குறைவு. காட்சித்திரையில் நிகழ்ச்சிகள் தோன்றும். இவற்றைத் திறத்தோடு இயக்க வேண்டும். இல்லக் கணிப்பொறிகளில் இவை இயக்கப்படுபவை. இவை மூன்று வகை: 1. திற விளையாட்டுகள்; சதுரங்க ஆட்டம். 2. வீர விளையாட்டுகள்; தேடுதல் 3. கேளிக்கை விளையாட்டுகள்; பல விளையாட்டுகள்.

gap digit - A digit present in a word. It is not a part of the information conveyed by the word, eg. a parity bit. இடைவெளி இலக்கம் : ஒரு சொல்லிலுள்ள இலக்கம். சொல் கொண்டு செல்லும் தகவலின் பகுதியன்று. எ-டு சம இலக்கம்.

garbage - குப்பை : கூளம். கணிப்பொறியிலுள்ள தேவையில்லாத பொருளற்ற தகவல்களின் தொகுதி.

garbage collection - குப்பைத் திரட்டு : தேவையில்லாத தகவல் தொகுதி.

gate - An electronic switch acting as a decision marker in digital systems by giving a binary output either 1 or 0 depending on the combination of binary input; otherwise known as logic circuit. வாயில் : ஒரு மின்னணுச் சொடுக்கி, இலக்கத் தொகுதிகளில் முடிவு செய்பவையாகச் செயற்பட்டு 1 அல்லது 0 என்னும் இரும வெளிப்பலனைக் கொடுக்கும். இச்செயல் இரும உட்பலனைக் கூடுகையைப் பொறுத்தது. வேறுபெயர் முறைமைச்சுற்று.

gate, kinds of - வாயில் வகைகள் : 1. உம் வாயில் (AND gate) 2. அல்லது வாயில் (OR gate) 3. இல்வாயில் (NOR gate) 4. இராவாயில் (NAND gate),

geek - மடமை, மடையன்(இழிவழக்கு)

geek speak - மடையர் பேசுகிறார் : கசப்பைத் தரும் பயனாளி உலகம். இதில் மக்களும் மனிதரும் ஒன்றே.

general programme - A Computer programme designed to solve a specific type of problem. For this purpose values of appropriate parameters are supplied. பொதுநிகழ்நிரல் : இது ஒரு கணிப்பொறி நிகழ்நிரல். குறிப்பிட்ட வகைச் சிக்கலை மட்டுமே தீர்க்க வடிவமைக்கப்பட்டது. இதற்குத் தோராய சுட்டளவுகளின் மதிப்புகள் வழங்கப்படும்.

general purpose computer - A computer capable of operating on different programmes used for the solution of a wide