பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Grove, Andrew S. -எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ் (1936 -) : இவர் நுண்முறையாக்கிகளை உற்பத்தி செய்யும் இண்டல் நிறுவனத்தின் முளை, நறுவல் தொழில்நுட்ப வித்தகர் பிறப்பால் அங்கேரியர்/பொறி இயலார். இவர் தன்னை எந்த ஒரு துறையின் தந்தை என்றும் கூறிக்கொள்ள விரும்பவில்லை. இன்று இந்த அளவுக்குக் கணிப்பொறிகள் வளர்ந்துள் ளதற்கு நறுவல் தொழில் நுட்பமே காரணம்.

gulp - A series of bytes considered as a unit. விழுமி : எண்மிகளின் (பைட்டு கள்) வரிசை. ஒர் அலகு பா.bit, byte.

Gurunet - குருஇணையம்: குரு வலையம். இது ஒரு பயன் பாட்டகம். திரு.முரளி என்பவரால் அமைக்கப்பட்டது. இவர் இந்து நாளிதழில் வலை யம் பேசுகிறது என்னும் தொடர் கட்டுரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் எழுதுபவர். எந்த ஒரு சொல், சொற்றொடர் பற்றியும் தகவல் தருவது. இதன் தகவல் தளம் அதற்கேற்ப அகராதி அமைப்பைப் பெற்றுள்ளது.

H

hacker - Computer programmer கணிப்பொறி நிகழ்நிரலர்.

hact - Stop: நிறுத்து .

hammer - A small pivoted flat head striking an embossed character against the paper in an impact printer. Eg. Daisywheel printer. சுத்தி : மையமாகப் பொருந்தியுள்ள சிறிய தலை. ஒரு தாக்கு அச்சியற்றியில் தாளுக்கு எதிராகப் புடைப்புருவை அடிப்பது.

Hamming code - A code system used for detecting and correcting errors in a flow of digital information. ஹேமிங் குறியீடு : இலக்கத் தகவல் நுட்பத்தில் பிழைகளைக் கண்டு சரிசெய்யப் பயன்படும் குறியீட்டு முறை.