பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hit

117

host


உயர் பகுப்பு வரைகலை : காட்சித்திரையில் காட்டப்படும் மிக நேர்த்தியான விளக்கமுள்ள உருக்கள்.

hit rate - The ratio of the number of records addressed in a run to the number of records in a file expressed as percentage. - ஒட்ட வீதம் : ஓர் ஓட்டத்தில் அணுக்கமுள்ள ஆவணங்களின் எண்ணிக்கைக்கும் கோப்பிலுள்ள ஆவணங்களின் எண்ணிக்கைக்குமுள்ள தகவு, விழுக்காடாகத் தெரிவிக் கப்படுவது.

HLL - High Level Language.உநிமொ : உயர்நிலை மொழி.

hold - The preservation of data in one storage. பிடிப்பு : ஒரு சேமிப்பில்சேமிக்கப்படும் தகவல் அளவு.

hold facility- A method of interrupting the operation of an anolog computer. பிடி வசதி : ஓர் ஒப்புமைக் கணிப்பொறியின் செயலை விளக்கும் முறை.

home computer - A microcomputer. இல்லக் கணிப்பொறி : நுண் கணிப்பொறி.

home page -தொடக்கப்பக்கம் : மின்னஞ்சலில் வருவது. ஒரு வலையத்தளத்தின் முதல் பக்கம். தளத்தைப் பற்றிய செய்திகளையும் தளத் திலுள்ள பிறபக்கங்களோடு உள்ள இணைப்புகளையும் கொண்டது.

Hopper, Grace -கிரேஸ் ஹாப்பர் : கணிப்பீட்டில் முன்னோடியாக அமைந்த பெண்மணி. அமெரிக்காவில் 1940 களில் திறப்பியுள்ள கணிப் பொறிகளை அமைக்க உதவியவர். அவற்றிற்குரிய மென்பொருள் உருவாக்கவும் உதவியவர். இவர் தம் அருஞ் செயல்களில் மூன்று : 1) உயர்நிலை மொழியான கோபலை உருவாக்கியவர். 2) உயர்நிலை மொழிகளை எந்திர மொழியாக மாற்றும் தொகுப்பியை உருவாக்கியவர். 3) முதல் கணிப்பொறிப் பிழையைக் கண்டறிந்தவர். பா. Computer, history of.

horizontal rule tag -கிடைமட்டக் கோட்டு ஒட்டு : கிடை மட்ட வரி வரையப் பயன்படுவது. வேறுபெயர் <HR> ஒட்டு.

host computer - 1) A computer having overall control in a communication network. Eg. Prestel. 2) A computer preparing programmes for execution on another type of computer.

ஒம்பு கணிப்பொறி : 1) ஒரு தகவல்தொடர்பு வலையமைவில் முழுக் கட்டுப்பாடுள்ள